அம்மா சிமெண்ட் (மானிய விலையில்) ஆன்லைனில் பெறுவது எப்படி தெரியுமா?

அம்மா சிமெண்ட் ஆன்லைனில் அப்ளை செய்து நாமே பெற்றுக் கொள்ளலாம். இது மிகவும் எளிது சந்தையில் கிடைக்கும் சிமெண்ட் விலையை விட மிகவும் குறைவு.

ஒரு முட்டையின் சிமெண்டின் விலை 190 ரூபாய்க்கும் நமக்கு கிடைக்கிறது. இதை ஆன்லைனில் அப்ளை செய்வது மிகவும் எளிது. புதிய வீடு கட்டிக் கொண்டு இருப்பவர்களும் கட்ட போகிறவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

உங்கள் வீட்டின் பட்ஜெட் தொகையில் கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை சேமிக்க வாய்ப்பு..

இந்த சிமெண்ட் தமிழக அரசால் புதிய வீடு கட்டுபவர்களுக்கு 750 மூட்டைகள் வரை மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது.

இந்தத் திட்டமானது மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டது.

பழைய வீடு உள்ளவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். பழைய வீடு இடிபாடுகளை சரிசெய்ய அல்லது புதுப்பிக்க 100 மூட்டை சிமெண்ட் வரை வழங்கப்படும். இதை முழுக்க முழுக்க ஆன்லைனில் மட்டுமே அப்ளை செய்ய முடியும்.

அம்மா சிமெண்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள்

  • voter ID
  • Ration card
  • Pan card
  • Aadhar Card

சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

உங்கள் ஊரில் உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் கடிதம் பெற்று மற்றும் உங்களுக்கான உறுதிமொழி சான்றுகளை அத்துடன் இணைத்து வீடு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்து இதனை பெற்றுக் கொள்ள முடியும்.

புதிய வீடு கட்டுபவர்கள் வீட்டின் பிளான் அப்ரூவல் சமர்ப்பிக்க வேண்டும்.

பழைய வீடு கட்டுபவர்கள் கோட்டாட்சியரிடம் கையொப்பம் பெற்று மற்றும் உறுதிமொழி சான்றிதழ் வைக்கவேண்டும்.

வழங்கப்படும் முறை

உங்கள் தொலைபேசி எண்ணின் மூலம் இதில் பதிவு செய்த பின்னர் உங்களைப் பற்றிய முழு விவரங்களை அந்த இணையதளத்தில் பதிவேற்றிய பின் உங்களுக்கான டோக்கன் நம்பர் வழங்கப்படும்.

அந்த நம்பரை குறித்து வைத்த பின்பு அம்மா சிமெண்ட் மெஸேஜ் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்.

அப்படி இல்லை என்றால் உங்களுக்கு குடோனில் இருந்து கால் செய்வார்கள்.

உங்களுக்கு கால் வந்தவுடன் உங்களின் ஆதார் கார்டு உங்கள் மெசேஜில் வந்திருக்கும் ஓடிபி நம்பர் மற்றும் ரேஷன் கார்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு நேரடியாக செல்ல வேண்டும்.

அந்த குடோனில் உங்களுக்கு தேவையான மூட்டையின் விலையை கொடுத்து இதனை இந்தியன் பேங்கில் டெபாசிட் செய்யச் சொல்வார்கள்.

இதுவே அம்மா சிமெண்ட் வாங்குவதற்கான வழிமுறை ஆகும்…

இதற்கான வெப்சைட் லிங்க் பின்வருமாறு

Website Link CLICK HERE

இதையும் படிக்கலாமே

1 Response

Leave a Reply

x
%d bloggers like this: