அழகை பாதுகாக்க பல வழிகளில் முயற்சி செய்து வந்தாலும் சில நேரங்களில் அந்த முயற்சி பலன் அளிப்பதில்லை. ஆகையால், நமக்கு எளிதில் கிடைக்கும் பூக்களைக் கொண்டு நமது முகத்தை அழகாகவும், நல்ல பொலிவுடனும் வைத்துக் கொள்வது எப்படி என்பதை இந்த பதிவில் முழுமையாக காணலாம்..
ரோஜா இதழ்கள்:
ரோஜாவின் இதழ்களை எடுத்து அதனுடன் பால் சேர்த்து, பேஸ்ட் போல் தயார் செய்து உதட்டின் மேல் பூசி வருவதால், உதடு அழகாகவும் பளபளப்பாகவும் காணப்படும்.
பன்னீர் ரோஜா:
பன்னீர் ரோஜாவின் உள்ள இதழ்களை எடுத்து வேப்பிலை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகம் கழுவினால், முகம் பொலிவாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.
நமக்கு எளிதில் கிடைக்கும் தாமரைப்பூவை சிறிது பால் விட்டு அரைத்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
சருமம் பொலிவு பெற மல்லிகைப் பூ மற்றும் லவங்கம் சேர்த்து அரைத்துக் கொண்டு அதில் சிறிது சந்தனத்தை கலந்து, முதுகு மற்றும் கை கால்களில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி வருவதால், முகம் மிகுந்த பொலிவுடன் காணப்படும்.