ginkgo tree meaning
ginkgo tree fruit
ginkgo tree for sale
ginkgo tree facts
ginkgo tree growth rate
when to plant ginkgo tree
ginkgo tree male vs female
ginkgo tree smell
சீனாவை பூர்வீகமாக கொண்ட கிங்கோ மரம் (Ginkgo tree)ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழும் தன்மை கொண்டதாக உள்ளது.
இந்த வகையான மரங்கள் எப்படி ஆயிரம் ஆண்டுகள் உயிரோடு உள்ளன என்பது என்ற உண்மையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மரங்கள் பொதுவாக வளரக்கூடியவை. ஆனால் இந்த வகையான மரங்கள் மற்ற மற்ற மரங்களை விட மெதுவாக வளரக்கூடியவை, ஆனாலும் மிகப் பெரியதாக வளர கூடியவை. இலையுதிர்காலத்தில் கண்களை கவரும் மஞ்சள் நிற இலைகளுடன் காட்சி அளிக்கும் இந்த மரம் மிகவும் அழகாக இருக்கும்.
பழமைவாய்ந்த இந்த மரங்களின் படிமங்கள் டைனோசர் காலத்தில் இருந்தே காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மரத்தைப் பற்றி அமெரிக்கா மற்றும் சீன விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது 15 முதல் 1000 வயது வரை உள்ள இந்த மரத்தின் பட்டைகள், இலைகள் மற்றும் விதைகள் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.
அந்த ஆராய்ச்சியின் முடிவில் பூச்சிகள் மற்றும் வறட்சியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தம்மை காத்துக் கொள்ளக் கூடிய இந்த மரங்கள் ஒருவிதமான ரசாயனத்தை உற்பத்தி செய்வதாக தெரிய வந்துள்ளது.
அதேபோன்று பொருட்கள் மற்றும் பிற தாவரங்கள் போல் குறிப்பிட்ட ஒரு காலம் வந்ததும் வயதாகும் தன்மை இந்த தாவரங்களுக்கு ஏற்படுவதில்லை.
பொதுவாக இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வந்த இந்த மரங்கள் பனி மற்றும் மின்னல் தாக்கப்பட்டு இருக்கக்கூடும், ஆனாலும் இந்த மரங்கள் ஆரோக்கியமானதாக காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமாக கூறுகின்றனர்.
இந்த இந்த ஆராய்ச்சிக் குழுவில் ஒருவரான அமெரிக்க வடக்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிசர்ச் கொஸ்சன் கூறுகையில் எங்களின் இந்த ஆராய்ச்சி பின்வரும் காலங்களில் நீண்ட காலம் வாழும் மரங்களின் நாளில் ரகசியம் குறித்து மேலும் பல தகவல்களை அறியலாம் என்கின்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
இந்த ஆராய்ச்சியை பயன்படுத்தி மனிதனாலும் நீண்ட நாட்கள் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறியுள்ளார்.
பொறுத்திருந்து பார்ப்போம் இந்த ஆராய்ச்சியின் முடிவை.