திரைத் துறையைப் பொருத்தவரை நடிகர்கள் வளர்வதை போல நடிகைகள் பெரிய அளவுக்கு வளர்வதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு காணாமல் போகிறார்கள். அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம்.
அந்தவகையில் ஒருகாலத்தில் கொடிகட்டி பரந்த நடிகைதான் ஹன்சிகா. தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வந்தார். தற்போது படங்கள் இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறார்.
இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தமிழ் சினிமாவில் வேற்றுமொழி பேசும் நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டிருக்கிறது. தமிழ் பேச கற்றுக்கொண்டாலும் ட்ப்பிங்கில் வேறு ஆளே பேசும் நடிகைகள் தான் வரும் படங்களின் நிலை.
அந்தவகையில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகி பின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். உடல் எடையை போகபோக கூட்டியதால் படவாய்ப்புகள் கிடைக்காமல் ஆளே மாறிப்போனார்.