Coconut water uses in Tamil இயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் நன்மைகள் பாயாசம் இளநீர் தீமைகள் tender coconut health benefits
Tender coconut water in tamil
என்னதான் நூறு ரூபாய்க்கு கடைகளில் விற்கும் குளிர்பானங்களை வாங்கி குடித்தாலும் நமது ஊரில் இயற்கையாக கிடைக்கும் இளநீருக்கு இணை ஏதுமில்லை. அப்படி அகப்பட்ட இளநீரை பற்றிய அரிய தகவல்களை இங்கு காணலாம்.
மூலநோயாளிகள், நாட்பட்ட சீதபேதி,ரத்த பேதி,கருப்பை ரணம், குருதிப் போக்கு காரணமாக வரும் ரத்தசோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது உடனடியாக இளநீர் பருகிவர அசதி, மயக்கம் வராது.
பித்தக் கோளாறு, பித்தக் காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக்.
சிறுநீர்த்தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரை டீஸ்பூன் தூள் செய்து கலந்து பருகி வர, 5 நாட்களில் தொந்தரவு நீங்கும்.
காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறை இளநீர் விட்டு அருந்தி வர நல்ல முன்னேற்றம் ஏற்படும்.