அனைத்துப் பெண்களுக்கும் அடர்த்தியான முடி, நீண்ட நகங்கள், முகப்பொலிவு ஆகியவற்றை பராமரிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. அந்த வகையில் நகங்களை வளர்ப்பது மட்டுமின்றி அதை மிகவும் பாதுகாக்க வைத்திருப்பது மிகவும் கடினமான வேலை. அந்த நகங்கள் உடைந்து போனாள், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இன்னும் சில பேருக்கு நகங்கள் சொத்தை பிரச்சனை ஏற்படுவதால், அதை வளர்ப்பதில் இன்னும் கவனத்தை செலுத்த வேண்டும். சில பெண்கள் அழகு நிலையத்திற்கு சென்று தங்கள் நகத்தை பராமரிப்பதற்கு பணம் செலவழிப்பது வழக்கம். ஆனால் இதன் மூலம் பெறக்கூடிய செயற்கை நகங்கள் நீண்டநாள் நீடிக்காது.
இயற்கை முறையை பயன்படுத்தி நகங்கள் நல்ல முறையில் பராமரிக்கலாம்.
நம் உடலில் உள்ள வைட்டமின் குறைபாட்டால், நகங்கள் எளிதில் உடைந்து விடுகிறது. நாம் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது, அது நமக்கு நம் உடலிற்கு சத்துக்களை சேர்ப்பது போல் நகங்களுக்கும் சத்துக்களை சேர்க்கும். ஆகையால், நாம் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு வருவதன் மூலம், நம் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.
நகங்களை டிரிம் செய்யுங்கள்:
நகங்களை ட்ரிம் செய்து வருவதனால், உடையாமல் பாதுகாத்து வரலாம். அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நகங்களை சுத்தம் செய்வது எப்படி:
நாம் அடிக்கடி கைகளை கழுவும்போது, நகங்களையும் சேர்த்து சுத்தம் செய்யலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நகங்களில் தேய்த்து சுத்தம் செய்து வருவதால், நகங்கள் பளபளப்பாகும் உறுதியாகவும் இருக்கும்.
இதைப்போல அழகு குறிப்புகளை காண கிளிக் செய்யவும் 👉👉 அழகு குறிப்புகள்