Mahalakshmi arul kidaikka tamil. நமக்கு வரும் வரவை விட செலவு அதிகமாக தான் ஆகிறது. அதற்கு சிறந்த வழி மகாலட்சுமி வழிபாடு.
மகாலட்சுமி ஒரு வீட்டில் குடியேறினார் அந்த வீடு செல்வச் செழிப்போடும் மகிழ்ச்சியோடும் இருக்கும் என்பது முன்னோர்களின் கருத்து. அவ்வாறு மகாலட்சுமி நம் வீட்டுக்கு வரவழைக்க நாம் செய்ய வேண்டியவை:
தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வாசலில் சாணம் தெளித்து கோலம்போட வேண்டும். அதன் பிறகு மகாலட்சுமியை வீட்டிற்கு வருக வருக என்று மூன்று முறை கூறி வரவேற்க வேண்டும்.
அதேபோல் மாலை நேரத்தில் விளக்கு வைத்த பிறகு தலை சீவுவது அல்லது பேன் பார்ப்பது போன்ற செயல்களை செய்ய கூடாது.
மாலை நேரங்களில் காய்கறி மற்றும் பொருள் கடனாக தரக்கூடாது.
வீட்டில் எப்பொழுதும் பால் பொங்கி வழிய கூடாது.
பெண்கள் எப்போதும் தங்கள் நெற்றியில் குங்குமம், தலையில் பூச்சூடி இருப்பது நல்லது.
வீட்டிற்கு வரும் பெண்களுக்கு குங்குமம் கொடுப்பது நல்லது. அதேபோல் குங்குமம் கொடுக்கும் பெண்கள் முதலில் அவர்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு மற்ற பெண்களுக்கு குங்குமம் கொடுக்க வேண்டும்.
பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளிப்பது நல்லது. அதேபோல் சனிக்கிழமையில் எண்ணை வைத்து குளிக்கக்கூடாது.
பெண்கள் இதை கடைபிடிப்பதன் மூலம் வீட்டில் மகாலட்சுமி அருள் பெற்று வீட்டில் செல்வம் பெருகும்.