Mirror cleaning Tips in Tamil | Best way to clean a mirror without windex follow this tips
பொதுவாகவே வீட்டை சுத்தம் செய்வது என்று எடுத்துக் கொண்டால் கண்ணாடியை துடைப்பது என்பது ஒரு பெரிய வேலையாக உள்ளது. என்னதான் கண்ணாடியில் நாம் கவனமாக துடைத்தாள் அதன் மேல் சிறிது சுத்தம் செய்ததற்கான அடையாளம் தங்கிவிடும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் கண்ணாடியை இனி எளிமையாக துடைக்கலாம்.
உங்கள் வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியை புத்தம் புதியதாகவும், பளபளப்பாகவும் மாற்ற விரும்பினால், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்.
கண்ணாடியைத் துடைக்க துணிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக காகிதத்தால் Paper கொண்டு சுத்தம் செய்யுங்கள், ஏனெனில் அது கண்ணாடியில் உள்ள அழுக்குகளை சிறப்பாக சுத்தம் செய்கிறது.
வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் வெள்ளை வினிகரை கலந்து பின்னர் கண்ணாடியை சுத்தம் செய்யவும். இப்படி செய்வதன் மூலம் உங்களது கண்ணாடி பளபளப்பாக புத்தம் புதியதாகவும் காணப்படும்.
டால்கம் பவுடர்: டால்கம் பவுடரை கண்ணாடியில் தூவி சிறிது நேரம் வைத்திருந்து சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யவும். இப்படி செய்யும் பொழுது உங்களது கண்ணாடிஒளிரும்
எலுமிச்சை: எலுமிச்சை சாற்றை சிறிது தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீரை நிரப்பவும். அதை கண்ணாடியில் தூவி ஒரு துணியால் சுத்தம் செய்யவும்.
உப்பு: தண்ணீரில் உப்பு சேர்த்து, அந்த திரவத்தால் கண்ணாடியை சுத்தம் செய்தால் கண்ணாடி புதியதாக இருக்கும்.