ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ…. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ….. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
ஆண் : முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ……
ஆண் : மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே
ஆண் : வழி எங்கும் பல பிம்பம் அதில் நான் சாய தோள் இல்லையே உன் போல யாரும் இல்லையே
ஆண்கள் : தீரா நதி நீதானடி நீந்தாமல் நான் மூழ்கி போனேன் நீதானடி வானில் மதி நீயல்ல நான்தானே தேய்ந்தேன்
ஆண் : பாதி கானகம் அதில் காணாமல் போனவன் ஒரு பாவை கால் தடம் அதை தேடாமல் தேய்ந்தவன்
ஆண் : காணாத பாரம் என் நெஞ்சிலே துணை இல்லா நான் அன்றிலே நாளெல்லாம் போகும் ஆனால் நான் ஆண்கள் : உயிர் இல்லாத உடலே…
ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ…. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ….. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
ஆண் : முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…..
ஆண் : தூர தேசத்தில் தொலைந்தாயோ கண்மணி உனை தேடி கண்டதும் என் கண்ணெல்லாம் மின்மினி
ஆண் : பின்னோக்கி காலம் போகும் எனில் உன் மன்னிப்பை கூறுவேன் கண்ணோக்கி நேராய் பாக்கும் கணம் ஆண்கள் : பிழை எல்லாமே கலைவேன்
ஆண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ…. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ….. குழு : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : ஆ….ஆஅ…..ஆ…..
ஆண் : முதல் நீ முடிவும் நீ மூன்று காலம் நீ… கடல் நீ கரையும் நீ காற்று கூட நீ…
ஆண் : நகராத கடிகாரம் அது போல் நானும் நின்றிருந்தேன் நீ எங்கு சென்றாய் கண்ணம்மா அழகான அரிதாரம் வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன் புன்னைகைக்கு போதும் கண்ணம்மா
ஆண்கள் : நீ கேட்கவே என் பாடலை உன் ஆசை ராகத்தில் செய்தேன் உன் புன்னகை பொன் மின்னலை நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்