கோடை வெப்பத்தை தணிக்கும் இயற்கை அருளிய அருள் பிரசாதம் இந்த நன்னாரி வேர். இதை நம் வீட்டிலேயே எளிதில் தயாரிக்க முடியும். நன்னாரி உடல் உஷ்ணம், மலச்சிக்கல், சிறுநீர் கடுப்பு ஆகியவற்றை குறைகிறது.
நன்னாரி வேர் சர்பத்தை வீட்டில் எளிதில் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்.



தேவையான பொருட்கள் – Ingredients
- சுத்தமான நன்னாரி வேர் – 3 கைப்பிடி
- தண்ணீர் – 300 மிலி
- சர்க்கரை – 250 கிராம்
நன்றாக தலைக்கு குளித்தாலும் பிசுபிசுப்பாகவே முடி இருக்குதா? Greasy hair treatment
செய்முறை – Directions
- நன்னாரி வேரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் ஊறவைத்து, பின்பு அடுப்பில் 300மிலி தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைத்துக் காய்ச்சவும்.
- சர்க்கரையை பாகாக்கிக் கொள்ளவும்.
கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்க டிப்ஸ் – Face dark spot remover tips
- நன்னாரி வேர் இட்ட தண்ணீர் பாதியாக சுண்டியதும் வடிகட்டவும்.
- இதில் சர்க்கரைப் பாகை சேர்த்து கம்பி பதம் வந்ததும் இறக்கவும்.
- ஆறியதும் பாட்டிலில் நிரப்பவும். கால் பங்கு சிரப்புடன் தேவையான தண்ணீர், சிறிது எலுமிச்சைச் சாறு, நறுக்கிய புதினா சேர்த்து பருகவும்.
நா வறட்சி, உஷ்ணம், கண் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்ச் சுருக்கு மற்றும்
அதிக தாகத்தைப் போக்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே



Latest Post


🔥 Trending
30 வயதை கடந்த பெண்களுக்கான சரும பராமரிப்பு -Skin Care for Women Over 30 age