5 வருடம் –> ரூ.2,80,000/- பெற அருமையான சேமிப்பு திட்டம்!! – National Savings Certificate Post Office

National savings certificate post office in Tamil Kisan vikas patra interest rates table saving calculator NSC தபால் துறையின் தேசிய சேமிப்பு

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.! இன்று நமது பதவியில் தேசிய சேமிப்பு பத்திரம்National Savings Certificate திட்டத்தின் விவரங்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பதிவின் கடைசியில் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது..🔗

இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொகையை சேமித்து அஞ்சலக சேமிப்பு பத்திரத்தை வாங்கி 5 வருடம் கழித்து பத்திரத்தை கொடுக்கும்போது செலுத்திய தொகை மற்றும் அதன் வட்டியும் இந்த சிறந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் கிடைக்கும்.

இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் நான் கடனுதவியும் பெற்றுக்கொள்ள முடியும். 😎

இந்தத் திட்டத்தில் எப்படி இணைவது யாரெல்லாம் பயன்பெற முடியும் எப்படி தொடங்குவது போன்ற அனைத்தையும் காணலாம் வாருங்கள்……

சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் – Maturity time

5 ஆண்டுகள்😉.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியானவர்கள் – Qualification

National Savings Certificate – திட்டத்தில் சேருவதற்கு இந்திய குடிமகனாக இருந்தால் மட்டும் போதும்!!😍

வயது வரம்பு – Age limit

18 வயது முதல் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்ய முடியாது.

குழந்தைகளுக்கு ( Children savings scheme ) இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் சேருவதற்கு ஆர்வமாக இருந்தால் தங்களது பெற்றோரின் அக்கவுண்ட்லேயே ஓபன் செய்ய முடியும் ✔.

ரூ.12/- செலுத்தினால் 4,00,000/- பெற புதிய திட்டம்..!
PMSBY And PMJJBY Scheme

தேவைப்படும் ஆவணம் – Documents

இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கு ஆதார் / பான் கார்டு, பாஸ்போர்ட், போட்டோ ஒன்று தேவைப்படும்.

வட்டி விகிதம் – Interest

இந்த சேமிப்பு திட்டத்தில் ( National Savings Certificate )(01.04.2020) அன்றிலுருந்து 6.8% வட்டி அஞ்சலகத்தில் கொடுக்கிறார்கள். அதோடு ஒவ்வொரு வருடத்திற்கும் கூட்டு வட்டி (Compound interest) இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் கிடைக்கும்.

வட்டி விகிதமானது 5 வருடத்திற்கு மாற்றம் இல்லாமல் இருக்கும்.🤑🤑🤑🤑

நாம் முதலீடு செய்யும் தொகை – Investment Amount

இதில் சேமிப்பு கணக்கு வைத்து முதலில் நாம் ரூ.100/-  செலுத்தி கணக்கை தொடங்க வேண்டும். மீண்டும் ரூ.100/- கொடுத்து சேமிப்பு பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச தொகை என்று எதுவும் இல்லை.

வரிச்சலுகை – Tax Deduction

இந்தத் திட்டத்தின் கீழ் நாம் சேரும் பொழுது நமக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படுகிறது. நீங்கள் 1.5 லட்சம் முதலீடு செய்து இருக்கின்றீர்கள் என்றால் 80C என்ற பிரிவின் படி வரியினை பெற்றுக்கொள்ளலாம்.

5 வருடம் பிறகு செலுத்திய தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு TDS(Tax Deducted At Source) வரிகள் எதுவும் பிடிக்கப்படாது.

கடன் வசதி – Credit

இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது. நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் 60% கடனுதவி பெறலாம்.

கடனுதவிக்கான வட்டி விகிதம் இந்த திட்டத்தினுடைய வட்டி 6.8% +2% சேர்த்து 8.8% வட்டி விகிதத்தின் மூலம் வாங்கும் கடனுதவிக்கு வட்டி போடுவார்கள்.

இந்த திட்டத்தில் ஒருவரின் அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டில் மாற்றுவதற்கு வசதி வாய்ப்பு உள்ளது.

தோராய கணக்கு – Estimation Earning

நாம் முதலீடு செய்யும் தொகை5 வருடம் பிறகு கிடைக்கும் தொகை 
ரூ.100/-ரூ.139.70/-
ரூ.1,000/-ரூ.1,397/-
ரூ.10,000/-ரூ.13,970/-
ரூ.1,00,000/-ரூ.1,39,702/-
ரூ.2,00,000/-ரூ.2,79,405/-

இதில் நாம் முதலீடு செய்ய அதிகபட்ச தொகை என்று எதுவும் இல்லை நீங்கள் எவ்வளவு வேணாலும் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு Fixed deposit செய்து பெரும் லாபத்தை விட இதில் அதிக லாபம் இருக்கிறது அதுமட்டுமின்றி அரசாங்க திட்டம் என்பதால் நாம் பயப்படத் (Investment Risk) தேவையில்லை.

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே தெரியும் சமூக வலைதளங்களில் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்..💖💖💖💖

ரூ.12/- செலுத்தினால் 4,00,000/- பெற புதிய திட்டம்..!
PMSBY And PMJJBY Scheme

இதையும் படிக்கலாமே

You may also like...

3 Responses

Leave a Reply

x
%d bloggers like this: