மயில் தோகையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். புத்தகங்களிலோ அல்லது வீட்டிலோ மயிலிறகுகளை வைக்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த மயில் தோகைகளை பலர் வீட்டில் அலங்கரிப்பார்கள். வண்ணமயமாக தோற்றமளிக்கும் மற்றும் கவர்ந்திழுக்கும் மயில் தோகை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மயில் தொகை என்பது ஒரு பறவையின் இறகு ஆனால் அது அன்றாட வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை.
மயிலிறகால் ஏற்படும் நன்மைகள்
பிரிந்த உறவை மீண்டும் இணைக்கிறது.
அதே போல குழந்தைகள் சரியாகப் படிக்காவிட்டாலும், சுறுசுறுப்பாக இல்லாவிட்டாலும் மயில் கிடைத்தால் அவர்களுக்குள் மாற்றங்கள் ஏற்படும் என்பது ஐதீகம்.
ராகு திசை நடக்கும்போது போது சிலருக்கு பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பிரச்சினைகள் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் உறங்கும் நேரத்தில் மயில் இறகை தலையணைக்கு அடியில் வைத்து உறங்குவதால் எதிர்மறை விளைவை நீக்குகிறது.
கிரக நிலைகள் சரியில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம் அப்படிப்பட்டவர்கள் வீட்டில் உள்ள படுக்கையறையின் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் மயில் இறகுகளை வைத்தால் நினைத்த காரியம் வேகமாக நடக்கும்.
பலர் சிறு குழந்தைகளுக்கு மயில் தோகை கொடுக்கிறார்கள். இது மிகவும் நல்ல முறை, புத்தகங்களில் மயில் இறகு இருப்பதால், குழந்தைகளிடம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதோடு, படிப்பில் பின்தங்கிய குழந்தைகள் நன்றாக படிக்க முடியும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
இந்த மயில் இறகு வாஸ்து தோஷத்தை நீக்குகிறது. வீட்டின் வாயிலின் முன் விநாயகர் சிலையுடன் மயில் இறகு வைப்பது வாஸ்து தோஷத்தை நீக்குவது மட்டுமின்றி வீட்டைச் சுற்றியுள்ள எதிர்மறை சக்திகளிலிருந்து வீட்டைப் பாதுகாக்கிறது.