ரூ.12/- செலுத்தினால் 4,00,000/- பெற புதிய திட்டம்..! – PMSBY And PMJJBY Scheme

PMSBY scheme details in tamil Pradhan Mantri Suraksha Bima Yojana பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனாவின் PDF

அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் வணக்கம்!! இன்னிக்கு நாம தெரியுமா.காம் பதிவுல மத்திய அரசின் இரண்டு திட்டங்களை பற்றி தான் பார்க்கப் போறோம்.

PMSBY And PMJJBY Scheme Details:

இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 4 லட்சம் கிடைக்கக்கூடிய அற்புதமான திட்டம். மத்திய அரசின் அந்த திட்டமானது மத்திய அரசின் முதல் திட்டமானது சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) மற்றும் ஜீவன் ஜோதி பீமா யோஜனா(PMJJBY)

இந்த இரண்டு திட்டத்தின் சிறப்புகளை தனித்தனியாக பதிவிட்டு உள்ளோம்.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம்:

வயது தகுதி:

இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 60 வயதுக்கு உள்ளவராக இருக்க வேண்டும்.

வருடம் செலுத்த வேண்டிய தொகை:

இந்தத் திட்டத்தில் இணைந்தால் நீங்கள் வருடத்துக்கு ரூ.12/ செலுத்தினால் போதும்.

திட்டத்தின் சிறப்பு:

எதிர்பாராத விபத்துக்கள் மூலம் இழக்க நேரிட்டால் அவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் கொடுக்கப்படும்.

அதுமட்டுமின்றி அந்த விபத்தில் உயிர் இழக்காமல் உடல் உறுப்புகள் இறந்தவர்களுக்கு ரூ.1-2 லட்சம் வரை தொகை வழங்கப்படும்.

குறிப்பு:
உடலில் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக இழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுக்கப்படுகிறது. அதே உடல் உறுப்புகள் இரண்டாக இழந்தால் 2 லட்சம் வரை வழங்குகிறார்கள்.

 பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம்:

வயது தகுதி:

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 50 ஆகவும் இருக்க வேண்டும்.

திட்டத்தின் சிறப்பு:

இந்தத் திட்டத்தின் கீழ் இறப்பவர்களுக்கு அவர் இயற்கையாகவோ அல்லது விபத்தில் இறந்தாலும் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

வருடம் செலுத்த வேண்டிய தொகை:

இந்த திட்டத்தில் நீங்கள் வருடத்திற்கு ரூ.330/- செலுத்தினால் போதும். விருப்பம் உள்ளவர்கள் இரண்டு திட்டத்திலும் சேர்ந்துக்கொள்ளலாம்.

ஒரு நபர் ஒரே நேரத்தில் ரூ.12/- திட்டத்திலும், ரூ.330/- திட்டத்திலும் சேரலாம்.

திட்டத்தில் சேருவதற்கு:

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்த வங்கியில் சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று விவரத்தினை நிரப்பி கொடுக்க வேண்டும். Net Banking வைத்திருப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

பணம் கட்டும் முறை:

இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் சேர்ந்தவுடன் உங்களின் வங்கி கணக்கின் விபரங்களை மத்திய அரசு சேகரிக்கும்.

உங்களுடைய வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து நேரடியாக மத்திய அரசை எடுத்துக்கொள்ளும். ஜூன் 1-ல் இருந்து மே-31 கணக்கின் படி தொகையினை எடுப்பார்கள்.

உங்களது பணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கும்பொழுது SMS வாயிலாக தெரிவிப்பார்கள்

முடிவடையும் காலம்:

PMSBY திட்டத்தில் தங்களுக்கு 70 வயது வரை இந்த திட்டத்தில் பணம் கட்டிவர வேண்டும்.

PMJJBY திட்டத்தில் தங்களுக்கு 55 வயது வரை திட்டத்தில் பணம் செலுத்தி வர வேண்டும்.

குறிப்பு:
உங்களுடைய வங்கி கணக்கில் போதுமான இருப்பு தொகை இல்லை என்றால் இந்த திட்டமானது தானாகவே முடிந்துவிடும். அதனால் கவனமாக வங்கி கணக்கை கையாளுங்கள்.

பணம் எப்படி பெறுவது:

எந்த வங்கியில் அப்ளை செய்துளீர்களோ அந்த வங்கி அலுவலரிடம் விவரத்தினை கேட்டால் அவர்களே முடித்து கொடுப்பார்கள்.

கட்டிய பணம் திரும்ப பெற முடியாது:

இந்த திட்டத்தில் மிகவும் குறைவான தொகை மற்றும் நிறைய சலுகைகள் கொடுப்பதால் கட்டிய பணம் திரும்ப கிடைக்காது.

கணக்கீடு:

இந்த இரண்டு திட்டத்திலும் சேர்த்து ஆகும் தொகை 330+12=342.

ஒரு நபர் இந்த திட்டம் 1ல், 18 வயது ஆகும்போது சேருகிறார்கள் என்றால் 70 வயது வரையிலும் இடைப்பட்ட காலமானது 52 வருடமாகும்.

அந்த நபர் 52 வருடத்திற்கு மொத்தமாக கட்டிய தொகை ரூ.624/-. அவர்களுக்கு இடையில் ஏதேனும் விபத்துக்கள் நேரிட்டால் இந்த திட்டத்தில் மூலம் நிறைய பயன்பெறலாம்.

இந்த மத்திய அரசின் இரண்டு திட்டத்திலும் சேர்ந்துக்கொள்வது மிகவும் நல்லது. முடியாதவர்கள் ரூ.12/- திட்டத்திலாவது சேர்ந்துக்கொள்ளுங்கள்.

ரூ.330/- திட்டத்தில் கணக்கீடு 18 வயது முதல் 55 வயது வரை கட்டும் தொகை ரூ.12,000-ற்குள் வரும். எதிர்காலத்தில் அனைவருக்கும் பயன்படக்கூடிய மிக சிறந்த திட்டம். அனைவரும் சேர்ந்து பயன்பெற வாழ்த்துக்கள்..!

ரூ.330/- திட்டத்தில் கணக்கீடு 18 வயது முதல் 55 வயது வரை கட்டும் தொகை ரூ.12,000-ற்குள் வரும். எதிர்காலத்தில் அனைவருக்கும் பயன்படக்கூடிய மிக சிறந்த திட்டம். அனைவரும் சேர்ந்து பயன்பெற வாழ்த்துக்கள்..!

இதையும் படிக்கலாமே

4 Responses

  1. SELVA MOORTHY.V says:

    SELVA MOORTHY.V

  2. Aswini says:

    School fees

  3. Keerthana says:

    Ineed own business need money help

Leave a Reply

x
%d bloggers like this: