தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தலை சிறந்த நடிகையாக விளங்குபவர் நடிகை ரெஜினா.
ரெஜினா தனது சிறுவயதிலிருந்தே நடிப்பை விரும்பினார், ஆரம்பத்தில் டிடி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் குழந்தை கலைஞராக பணியாற்றினார்.
அவர் தமிழில் முதல்முதலில் கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவர் தொடர்ந்து அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி கதா நாயகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துக்கொண்டு இருக்கிறார்.
அவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.