Natural Beauty Tips to lighten your dark hands and feet in tamil கருப்பான கைகளையும் கால்களையும் வெள்ளையா மாற்ற Skin Care in tamil
கருப்பான கைகளையும் கால்களையும் வெள்ளையாக்க இதோ சில வழிகள்
அழகு என்பது ஆண்பாலா, பெண்பாலா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததோ இல்லையோ!! இந்த வெயில் காலம் வந்துவிட்டால் இருபாலருக்கும் அழகு கேள்விக்குறியாகவே உள்ளது. அழகு என்றால் அது வெறும் முகம் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை முகம் பளிச்சென்று இருந்து கை கால்கள் கருமையாக இருந்தால் காமெடியாக இருக்கும்😂😂..
மாறிவிட்ட கால சூழ்நிலையில் வெப்பமயமாதல் பூமிக்கு மட்டும் இல்லை நமது சர்மத்திற்கு ஆபத்துதான். நாம் இந்தப் பதிவில் நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு கை மற்றும் கால்களை வெள்ளையாக மாற்றும் வழிகளை பார்க்கலாம்.
தேன் மற்றும் வெள்ளரிக்காய்
நல்ல பிஞ்சு வெள்ளரிக்காய் அரைத்து அத்துடன் சிறிது தேன் சேர்த்து கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இப்படி இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்து வர கை கால்களில் உள்ள கருமை நீங்கி வெள்ளையாகும்.
ஆலிவ் ஆயில் என்பது சிறிது விலை உயர்வு தான். இருந்தாலும் அதில் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆலிவ் ஆயில் கொண்டு தினமும் கை மற்றும் கால்களில் மசாஜ் செய்துவர கருமை நிறம் மறைந்து விடும்.
ஆலிவ் ஆயிலுடன் சிறிது குங்குமப் பூவை சேர்த்துக் கொண்டால் இன்னும் சிறப்பு. சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்
இளநீர்
நமது ஊரில் எளிதில் கிடைக்கக்கூடிய இளநீர் மிகவும் மருத்துவ குணம் கொண்டது. இளநீரை தினமும் அல்லது வாரம் இருமுறையோ கை, கால்களில் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர உங்களது கை மற்றும் கால்கள் வெண்மை அடையும்.
தயிர்
தயிர் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க மிகவும் உதவுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் ஜிங்க் அதற்கு காரணம். தயிரை தினமும் கை மற்றும் கால்களில் தடவி மசாஜ் செய்து வர சருமம் வறட்சியாக இருப்பதிலிருந்து விடை பெறலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை
எலுமிச்சம்பழம் மற்றும் வெள்ளரிக்காய் சாறுகளை ஒன்றாக சேர்த்து கலந்து கை கால்களில் தடவி ஊறவைத்து கழுவ வேண்டும். அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.
தக்காளி
எளிதில் கிடைக்கக்கூடிய தக்காளியை தினமும் அரைத்து அதனை கை கால்களில் தடவி ஊற வைத்து பின்பு கழுவி வர வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் சரும நிறத்தை மேம்படுத்தும்
எண்ணெய் வடியும் சருமம் என்றால் நீங்கள் முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் பயன்படுத்துங்கள். அதுவும் வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.
ஓட்ஸை பொடி செய்து வைத்துக்கொண்டு அதனுடன் தயிர் மற்றும் தக்காளி சாறு சேர்த்து கை மற்றும் கால்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவினால் சருமத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி இறந்த செல்களும் போய்விடும்
மசித்த பப்பாளி பழத்தை பால் பவுடர் மற்றும் தேன் சேர்த்து கலந்து தடவி நன்கு ஊற வைத்து கழுவ, சருமத்தின் நிறம் மேம்பட்டிருப்பதைக் காணலாம்.
பால்
நன்கு காய்ச்சிய பாலை கை மற்றும் கால்களில் தடவி நன்கு ஊற வைத்து நீரில் நனைந்த பஞ்சு பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும். தினமும் வெளியே வெயிலில் சென்று வந்ததும் இதுபோல் செய்தால் சருமத்தில் கருமை ஏற்படுவதை தடுக்கலாம்.
ஊறவைத்த பாதாம் பருப்பை அரைத்து பேஸ்ட் செய்து கை மற்றும் கால்களில் தடவி வர கருமை நீங்கி வெண்மையாகும்.
சந்தனம் மற்றும் முல்தானி மெட்டி
சந்தனப் பொடியுடன் முல்தானி மட்டியை சேர்த்து நன்கு தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து கொண்டு கை மற்றும் கால்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3 முறையாவது செய்தால் கருமை நீங்கி வெண்மையாகும்.
சீரகம்
சீரகத்தை நன்கு நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்பு இறக்கி, ஆறவைத்து அதனால் கை, கால்களை கழுவ வேண்டும். இப்படி கழுவிவர கை மற்றும் கால்களில் உள்ள கருமை நிறம் மறைந்து வெள்ளையாகும்.
ஆரஞ்சு பழத்தை உண்டு விட்டு தேவையில்லை என தூக்கி போடும் தோலில் பல சத்துக்கள் உள்ளது. பழத்தின் தோலை உலர வைத்து அதனை பொடி செய்து அந்த பொடியுடன் பால் சேர்த்து பேஸ்ட் ஆக்கி கை மற்றும் கால்களில் தடவி உலர வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கை மற்றும் கால்களில் நிறத்தை அதிகரிக்க முடியும்.
எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழத்தில் இயற்கையாகவே அழுக்கை விரட்டும் சக்தி உள்ளது. அதுமட்டுமின்றி அதில் ப்ளீச்சிங் தன்மை அதிகமாக உள்ளதால் கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஒரு எலுமிச்சம் துண்டினை எடுத்து அதனை கை, கால்களில் தேய்த்து பின்பு கழுவினால் சிறந்த பலனை பார்க்கலாம்.
வெள்ளையான சருமம் வேண்டுமென்றால் உருளைக்கிழங்கு சாறு எடுத்து அந்த சாற்றினை தினமும் கை மற்றும் கால்களில் தடவி உலர வைத்து, பின்பு குளிர்ந்த நீரில் பஞ்சை நனைத்து அதனை துடைத்து எடுத்தால் நல்ல பலனை அடையலாம்.