India unknown facts
இந்தியாவைப் பற்றிய நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான உண்மைகள் தெரியுமா?
- மாசின்ரம் – மேகாலயாவில் உள்ளது. உலகிலேயே அதிக மழைப் பெரும் இடம். கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
- ஷானி ஷிங்கினாபூர் – மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் கதவு இருக்காது.
- மதோப்பட்டி -உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. அதிகமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கிய பகுதி.
- உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக சைவம் உணவு மட்டுமே உட்கொள்ளும் மக்கள் வாழ்கின்றனர்.
- சைல்-ஹிமாச்சல் பிரதேசம். உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள இடம்.
- அதிகமாக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.
- கும்பமேளா என்பது 12 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆன்மீக நிகழ்வு. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு
- உலகின் உயரமான ரயில் பாலம். ஜம்மு காஷ்மீரில் உள்ளது.
- இந்தியாவில் ஒரு நாளைக்கு ரயில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகைக்கு சமம்.
- தங்க கோயில் (கோல்டன் டெம்பிள்) – அம்ரித்சர், பஞ்சாப். உலகில் அதிகமாக சுற்றிப் பார்க்கப்பட்ட இடம்
- எலிகளின் கோவில் – கார்னி மாதா கோவில், ராஜஸ்தானில் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் இந்த கோவிலில் உள்ளன. இங்கு வரும் பக்தர்கள் எலிகளை தங்கள் முன்னோர்களாக எண்ணி வழிப்படுகின்றனர்.
- எலும்புக்கூடு ஏரி- உத்தரகாண்ட்டில் உள்ளது. இதன் அடிப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் உள்ளதாக நம்பப் படுகிறது.
- உலகின் உயர்ந்த மோட்டாரபிள் ரோடு– லடாக்
- உலகின் முதல் ரயில் மருத்துவமனை– தி லைப்லைன் எக்ஸ்பிரஸ் அல்லது ஜீவன் ரேகா எக்ஸ்பிரஸ்
- டாக்டர். ஏ. பி.ஜே. அப்துல் கலாம் – முன்னால் இந்திய குடியரசு தலைவர். சுவிட்சர்லாந்திற்கு சென்ற நாள் அந்த நாட்டின் அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.
- பியர் கிரில்ஸ்- பள்ளி படிப்பை முடித்தவுடன் இந்திய ஆர்மியில் சேர வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தாராம். அந்த அளவிற்கு இந்திய ராணுவம் புகழப் பெற்றது.
- இந்தியாவின் முதல் ராக்கெட் சைக்கிளில் வைத்து கொண்டு செல்லப் பட்டது. 1963.
- இந்தியாவில் பெற்றோர்களை வயதானப் பிறகு தனியே விடுவது குற்றமாகும்.
- குஜராத்தில் கிர் காட்டில் வசிக்கும் மஹாந்த் பாரத் தாஸ் என்பவருக்காக 2004 தேர்தலில் இருந்து ஆண்டுதோறும் தனி வாக்குச் சாவடி அமைக்கப் படுகிறது.
- உலகிலேயே ஒருவரின் இறுதி ஊர்வலத்திற்கு அதிக மக்கள் பங்கேற்றது இந்தியாவில் தான். அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் திரு.சி.என்.அண்ணாதுரை அவர்களின் இறுதி ஊர்வலம்.
- உலகின் முதல் மிதக்கும் தபால் நிலையம்- தால் ஏரி (Daal Lake) , ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்.
- உலகின் மிதக்கும் தேசியப் பூங்கா– கெய் புல் லம்ஜாஓ, ( keibul lamjao) மணிப்பூர்.
- லோனர் ஏரி (Lonar Lake)- மகாராஷ்டிரா, விண்கல் மோதியதால் உருவானது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story