உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்..!

வாஸ்து: பெரும்பாலானோர் வாஸ்துப்படியே தங்கள் வீட்டில் பொருட்களை அலங்கரிக்கின்றனர். வாஸ்து விதிக்கு முரணான பொருட்கள் இருந்தால் நல்லது நடக்காது, வருமானம் குறையும், பணம் நஷ்டம், தீமை நடக்கும் என்கின்ற உணர்வு அவர்களுக்குள் உண்டு.

உங்கள் வீட்டில் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டுமென்றால் சில யோசனைகளை வாஸ்து வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, பணம் சேர படுக்கையறை மற்றும் பூஜை அறை ஜன்னல்களைத் பகல் நேரங்களில் திறந்து வைத்திருக்க வேண்டும்.

அதாவது சூரிய ஒளி அந்த அறையில் படுமாறு இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் உருவாகும்.

மேலும் வாசல் கதவுக்கு முன்னால் செருப்பு ஸ்டாண்டை வைப்பது நல்லது, ஏனெனில் அது நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. இதனால் பணம் பெருகும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் பணப்பையில் சிறிது அரிசியை வைத்திருப்பது செல்வத்தைத் தரும் மற்றும் எந்தவொரு நிதி சிக்கல்களையும் நீக்கும்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி தெற்கு நோக்கி தலை வைத்து உறங்குவது அமைதியைத் தரும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, அமைதி மற்றும் பணத்திற்காக வீட்டில் வாஸ்து மீன்களை வளர்ப்பது நல்லது.

மேலும் குறிப்பிட்ட அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தின்படியே கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமண்ட் செய்யவும்.