கிராம்புகள் மசாலாப் பொருட்களின் ராஜா. இந்திய மசாலாப் பொருட்களில் கிராம்பு ஒரு மரியாதைக்குரிய இடத்தைப் பிடித்துள்ளது.
சுவையான உணவைத் தயாரிப்பதிலும், இருமல் மற்றும் சளி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையிலும் அவை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன
கிராம்புகள் பீனாலிக் சேர்மங்களின் உயர் மூலமாகும். இவற்றில் யூஜெனால், கேலிக் அமிலம் மற்றும் யூஜெனால் அசிடேட் ஆகியவை நிறைந்துள்ளது.
இருமலுக்கு கிராம்பு பயன்படுத்துவதற்கு உகந்ததாக உள்ளது, ஏனெனில் அவை தொண்டை புண் மற்றும் நிலையான இருமலின் விளைவாக ஏற்படும் வலியை சமாளிக்க உதவும் தனித்துவமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.
இருமலுக்கு கிராம்பை எண்ணெய் வடிவில் பயன்படுத்தும் போது, அது இயற்கையான சளி நீக்கியாக செயல்படுகிறது.
தொண்டை வலிக்கு கிராம்பு ஒரு சிறந்த வலி நிவாரணி. இது தொண்டையில் ஏற்படும் அரிப்பு உணர்விலிருந்து நிவாரணம் அளிக்கசிறந்தது
கடுமையான இருமலிலிருந்து உடனடி நிவாரணத்திற்காக சிறிது நிவாரணம் பெற கிராம்பை மென்று சாப்பிடவும்
ஒரு துளி ஆர்கானிக் தேனை எடுத்து சிறிது கிராம்பு எண்ணெயுடன் கலக்கவும். இந்த வீட்டு வைத்தியத்தை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும் இரும்பல் பறந்து ஓடும்.