வீட்டிலேயே செய்யக்கூடிய 21 அழகு குறிப்புகள் – 21 Beauty Tips You Can Do at Home
ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.
முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.
தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.
பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.
துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.
வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.
உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெயை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.
பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.
முட்டையின் வெள்ளைகரு,தேன்,மாதுளை ஜூஸ் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் முகத்தில் பூசிவிட்டு முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.
பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.
சருமம் உலராமல் பளபளப்புடன் இருக்க, தினமும் பசும்பாலை தேய்த்துவிட்டு குளியுங்கள்.
பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகம் , கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.
எலுமிச்சை பழச்சாறு,பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
பாசிப் பருப்பை தேங்காய் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.
கொத்தமல்லி மற்றும் மஞ்சள் பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.
ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.
பூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச்சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.
பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வர சருமம் மென்மையாகும்.
சர்க்கரையுடன் சிறிது கிளிசரின் சேர்த்துக் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.
தாமரை, ரோஜா, ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்.
மேலும் இது போன்ற ஆன்மீக பாடல்களுக்கு கிளிக் செய்யவும் 👉👉👉 | ஆன்மிகம் தகவல் |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]