3 Benefits of Aloe Vera in Tamil
கற்றாழையின் நன்மைகள்
கற்றாழை உங்கள் அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் ஒரு மருந்து. இந்த அற்புதமான மூலிகை இலையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிய நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள் என்பது தெரிகிறது.
உண்மையில் கற்றாழையை உங்கள் அழகு பராமரிப்புக்கு பயன்படுத்தலாம். இயற்கையாக கிடைக்கும் கற்றாழையை விடுத்து நீங்கள் செயற்கையாக கடைகளில் கற்றாழை எண்ணெய் வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
பின்வரும் மூன்று வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் சரும பிரச்சினைகளையும் தோல் பிரச்சனைகளையும் கற்றாழையை கொண்டு சரி செய்யுங்கள்.
1. இயற்கையாக கிடைக்கும் கற்றாழை பட்டையை எடுத்துக் கொள்ளுங்கள்
இரண்டு அல்லது மூன்று பட்டைகளை அதன் முட்களை நீங்கி மேலே உள்ள தோலையும் நீக்கி நன்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது பாதாம் எண்ணெயைச் சேர்த்து, இரவு படுக்கைக்குச் செல்லும் முன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். இரவு முழுவதும் விட்டுவிட்டு காலையில் கழுவவும்.
2. DIY அலோ வேரா ஃபேஸ் மாஸ்க்
எண்ணெய் மற்றும் கறை படிந்த சருமத்திற்கு:
உங்களுக்கு எண்ணெய் சருமம் இருந்தால், இந்த கற்றாழை மாஸ்க் உங்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் கறைகளை அகற்ற உதவும். ஒரு கோப்பையில் கற்றாழை சாறு எடுத்துக் கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும். நன்றாக கலக்கவும். இந்த கலவையை இரவில் படுக்கும் முன் உங்கள் முகத்தில் தடவி காலையில் கழுவவும். வாரம் ஒருமுறை இதை செய்தால் உங்கள் முகம் எண்ணை பசையை இறந்து பளபளப்பாக இருக்கும்.
3. வறண்ட சருமத்திற்கு கற்றாழை
வறண்ட சருமத்திற்கு:
வறண்ட மற்றும் மந்தமான சருமத்தை மிருதுவான சருமமாக மாற்ற கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து ஃபேஸ் மாஸ்க்கை தயார் செய்யவும். இவற்றைப் பயன்படுத்தும்போது, சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது கற்றாழை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை தடவி 20 நிமிடம் விட்டு பின் கழுவவும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story