Carrot benefits in Tamil : Juice, oil. Facial Benefits and skin Kheer soap seeds Boldsky கேரட் ஜூஸ் நன்மைகள் செய்யும் முறை பீட்ரூட் ஜூஸ்
Carrot benefits in tamil
கண் பார்வை
கேரட்டில் அதிகமான அளவு பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டின் எனும் தாதுவில் உள்ள வைட்டமின் A சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வையை மங்காமல் பார்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் இரவு நேரங்களிலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண்கள் சம்பந்தப்பட்ட எந்த விதமான நோய்களும் உங்களை ஒருபோதும் தீண்டாது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மாரடைப்பை குணமாகும்
கேரட்டில் பீட்டா கரோட்டின் மட்டுமின்றி ஆல்பா கரோட்டின் லுட்டின் ஆகியவையும் இணைந்தே இருக்கின்றன. கேரட்டை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள ஊளைச் சதையும் குறைந்துபோகும், கொழுப்பு குறைவது மட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்து காரணமாக பசியும் உங்களுக்கு அடங்கிப் போகும். இதனாலேயே இதய வால்வுகளில் உள்ள ரத்த நாளங்கள் கொழுப்பு அடைக்காமல் மாரடைப்பு முதலான இதய நோய்கள் சம்பந்தப்பட்ட எவையும் உங்களை வருவதற்கு வாய்ப்பு குறைவாக ஏற்படுத்திக் கொடுக்கும் தன்மை இந்த கேரட்டுக்கு உண்டு.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
என்றும் இளமையாக வைத்திருக்கும்
கேரட்டில் இருக்கும் இந்த பீட்டா கரோட்டின் எனப்படும் தாது ஆன்ட்டி ஆக்ஸிடென்டாக செயல்படுகின்றது. இந்த ஆன்டி ஆக்சிடன்ட் நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது. இதன் காரணமாக வயதான தோற்றம் மறைந்து போகும்.
30 வயதிலேயே வயதான தோற்றம் வருகிறது என்று வருத்தப்படுவார்கள் தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் உங்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் காண்பீர்கள்.
உங்களது மேனி எப்போதும் பளபளப்பாக இருக்க தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸை தினமும் அருந்துங்கள்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
புற்றுநோய்க்கு
பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை கேரட்டில் அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் வருவதற்கு காரணமான வாய்ப்புகளை மிகவும் குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய், நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய், மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய், போன்றவற்றை வருவதற்கான வாய்ப்புகளை மிகவும் குறைகின்றது இந்த கேரட்.
பற்களுக்கு பலம் சேர்க்கும்
கேரட்டை தினமும் சாப்பிடுவதனால் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரப்பதால் நமது வாய்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து போகும். கொஞ்சம் கடினமான கேரட்டை நன்றாக கடித்து சாப்பிடும்போது பற்கள் வலுவடைவதோடு பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கும் நீங்குகிறது.
மூளை திறன்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஒவ்வொரு மனிதனும் இறக்கும் காலம் வரை, அவனது உடலின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்ளும் ஒரு உறுப்பாக மூளை இருக்கிறது. அனைவருக்குமே வயது அதிகரிக்கும் போது மூளை செயல்திறனில் குறைபாடு, மந்தநிலை போன்றவை ஏற்படுவது இயற்கையான ஒரு விடயமாகும். எனினும் பீட்டா – கரோட்டின், ஆன்டி – ஆக்சிடென்ட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு மூளை சுறுசுறுப்பாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும். இதற்கான சிறந்த இயற்கை உணவு காரட் ஆகும்.
நார்ச்சத்து
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மனிதர்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து திடகழிவுகள் வெளியேறுவது மிகவும் கடின செயலாக மாறிவிடுகிறது. நார்ச்சத்து மிகுந்த கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உணவில் நார்ச்சத்து தேவை பூர்த்தியாகி, செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
சருமத்தின் பாதுகாவலன்
சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது. சில சமயங்களில் தோல் புற்றுநோய் ஏற்படும் அளவுக்கு இவை காரணமாக அமைந்து விடுகின்றது. கேரட்டில் வைட்டமின் A மற்றும் வைட்டமின் C சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த சத்துக்களானது நமது சருமத்தில் ஈரப்பதம் குறைக்காமல் பாதுகாக்கின்றது. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோளில் பளபளப்பு தன்மை அதிகரிக்கும். நீங்கள் எப்போதும் இளமைத் தோற்றத்துடன் காட்சி அளிப்பீர்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]