Hair Care Tips in tamil கொட்டிபோன தலைமுடி மீண்டும் வளர நரைமுடி மறைய hair fall tips homemade in tamil hair growth tips Home made
வாழ்க்கையில் பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் இருக்கும். இதில் ஒரு முக்கியமான பிரச்சினை என்றால் அது தலை முடி சம்பந்தமான பிரச்சினை.

தலை முடி உதிர்வு, வழுக்கை, சொட்டை, இளநரை, செம்பட்டை புழுவெட்டு என்று பலவகைகளில் நமக்கு தொல்லைதரும். இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் கைவசம் தீர்வுகள் இயற்கை முறையில் இருக்கின்றன.
how to stop hair fall immediately
தலைமுடி பராமரிப்பு – வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
கூந்தல் பராமரிப்பு – கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலைக்கு தடவி வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் முடி நன்றாக வளரும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தலைமுடி பராமரிப்பு – நெல்லிக்கனியை தினமும் உணவில் சேர்த்து வர இளநரை பிரச்சனை சரியாகும்.
கூந்தல் பராமரிப்பு – ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
கூந்தல் பராமரிப்பு – அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து, கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
தலைமுடி பராமரிப்பு – மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
தலைமுடி பராமரிப்பு – தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
கூந்தல் பராமரிப்பு – கருவேப்பிலையை நன்றாக அரைத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தடவி வர முடி நன்றாக வளரும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
கேரட் மற்றும் எலுமிச்சை பழசாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாக காய்ச்சி தடவி வந்தாலும் முடி நன்றாக வளரும்.
கூந்தல் பராமரிப்பு – நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]