Home Remedies to Cure Skin Problems/ Allergy!
காலநிலை மாற மாற அதற்கேற்றதுபோல் சரும நிலையும் மாறி வருகிறது. ஏனெனில் அதிக சூரிய ஒளி தாக்கம், முகப்பரு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றால் சருமம் அதிக அளவு பாதிப்படைகிறது. அதுமட்டுமல்லாமல் உடலில் மெலனின் (Melanin ) அளவு குறைவாக இருப்பதால் சருமம் அதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து உடனே நோய் தாக்கத்திற்குள்ளாகிறது.
சிலரின் முகத்தில் வெள்ளை திட்டுக்கள் (skin white patches) அதிகமாக தென்படும். அதேசமயம் தேம்பல் (Malassezia furfur) , எச்சில் தாம்பூலம், போன்ற சரும பிரச்சனைகள் அதிகளவு காணப்படும். இது போன்ற சரும நோய்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. இப்பிரச்சனையை குணப்படுத்த சிலர் ஆயின்மென்ட் (OINTMENT) போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் இயற்கையான முறையில் மட்டுமே இந்நோயை அடியோடு அழிக்க முடியும்.
இதுபோன்ற வெள்ளைத் திட்டுக்கள் குறைய அதிக அளவு நீரை பருக வேண்டும். ஏனெனில் நம் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவாக இருந்தால் இது போன்ற சரும நோய்கள் உடனே பாதிப்பை ஏற்படுத்தும். உடல் செரிமானத்திற்கு உதவும் இஞ்சியை தண்ணீரில் கொதிக்கவைத்து தினமும் இரு வேளை பருகுவதால் நம் உடலில் தென்படும் வெள்ளைத் திட்டுக்கள் எளிதில் நீங்கிவிடும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
Medicine for skin rashes and itching | Tamil Beauty Tips
மாதுளையால் ஏற்படும் நன்மைகள்:
- அனைவருக்கும் தெரிந்த மாதுளை பழத்தை தினமும் உண்பதால் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும்.
- அதேசமயம் ரத்தம் சுத்தமாக சுத்தமாக நம்முடைய சருமமும் பொலிவுடன் காணப்படும்.
- பழத்தை போலவே மாதுளை இலையிலும் அதிக சத்துக்கள் உள்ளன. மாதுளை இலையை பறித்து நன்றாக உலர்த்தி பொடியாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் தினமும் இருவேளை கொடுக்க வேண்டும்.
இப்படி செய்வதின் மூலம் சரும நோய் மட்டுமல்லாமல் செரிமானம் மற்றும் தொண்டை போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.
அத்திப்பழத்தால் ஏற்படும் நன்மைகள்:
- அத்திப்பழம் வெள்ளைத் திட்டுக்கள் போன்ற சரும நோய்களுக்கு ஓர் சிறந்த மருந்தாகும்.
- அத்திப் பழத்தில் அதிக அளவு கார்போஹைட்ரேட், புரதம், மெக்னீசியம், போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளது.
- அத்திப் பழத்தை உண்பதால் சரும நோய்கள் நீங்கி முகம் பொலிவுடன், வழவழப்பாகவும் காணப்படும்.
சருமத்தில் நோய் தென்பட்டவுடனே அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நோய் அதிகமாகி சருமத்தை முற்றிலும் பாதிக்கும்.
மேலும் இது போன்ற ஆன்மீக பாடல்களுக்கு கிளிக் செய்யவும் 👉👉👉 | ஆன்மிகம் தகவல் |
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]