How to remove dark spots on nose: face pimple marks removal at home Dermatologist treatment for dark spots on face கரும்புள்ளிகள்
How to remove dark spots on face fast
மூக்கும் முழியுமாக இருக்கிறார்கள் என்று நமது முன்னோர்கள் அழகுக்கு கூறும் உவமையாக கூறுவது மூக்கு மற்றும் கண்களை பற்றி தான் கூறுகிறார்கள். மூக்கிற்கு மேலே சிலருக்கு சொரசொரப்பாகவும், கருமையான புள்ளிகளாகவும் இருக்கும். அதிலும் மூக்கிற்கு பக்கவாட்டில் அத்தகைய கரும்புள்ளிகளால், அவ்விடமே கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இப்படிப்பட்ட கரும்புள்ளிகள் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகளால் வரக்கூடியது. இதற்கு அவ்வப்போது முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவதோடு, முகத்தை துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஸ்கரப்கள் பயன்படுத்த வேண்டும்.
Dermatologist treatment for dark spots on face
அதற்கு கடைகளில் விற்கப்படும் ஸ்கரப்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டுச் சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே அற்புதமான ஸ்கரப்புகளை செய்யலாம். சரி நண்பர்களே, இப்போது அந்த ஃபேஸ் ஸ்கரப்புகளை எப்படி செய்வதென்று பார்ப்போமா..!
முக்கிய குறிப்பு:- இந்த அழகு குறிப்பானது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் உரியதே.. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மஞ்சள் கலந்ததை மட்டும் ஆண்கள் தவிர்க்கவும்….
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
உப்பு
உப்பை நீரில் கலந்து, மூக்கின் மேல் தடவி, மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவினால், மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பு நீங்கும்.
கடலை மாவு
கடலை மாவை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை மூக்கின் மேல் தடவி, கீழிருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
பட்டை
பட்டை பொடியை எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி உலர வைத்து, பின் தண்ணீர் தொட்டு ஸ்கரப் செய்து கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
சர்க்கரை
சர்க்கரையை எலுமிச்சை சாற்றில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.
முட்டை
முட்டையின் வெள்ளைக் கருவை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கரும்புள்ளிகள் மறையும்.
தயிர்
தயிரில் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து, கோடையில் முகத்தை தேய்த்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மட்டுமின்றி கரும்புள்ளிகளும் நீங்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தக்காளி
தக்காளியில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, கரும்புள்ளிகளை எளிதில் வெளியேற்ற உதவும். அதற்கு தக்காளியை இரண்டாக வெட்டி, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.
தேன்
தேனை சாதாரணமாக முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் நீங்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவில் தண்ணீர் சேர்த்து, அதனைக் கொண்டு முகத்தில் சொரசொரப்பாக உள்ள இடத்தில் தேய்த்து கழுவினால், சொரசொரப்பு நீங்கிவிடும்.
டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
எலுமிச்சை
எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் விரைவில் நீங்கும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]