Skin care tips in tamil – Natural Beauty Tips Quick Face Whitening Tips daily skin care routine சருமம் டிப்ஸ் Summer Skincare அழகு குறிப்புகள்
நம்மில் பலருக்கும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும் சருமத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் ஆசை உண்டு.
Healthy skin tips for face
அதிலும் முக்கியமாக பெண்களுக்கு ஆசை அதிகம். அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் இதை மிக அவசியமாக கருதுகின்றனர்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
நமது பாரம்பரிய முறைப்படி இயற்கையிலேயே சரும பராமரிப்பு என்பது பெண்களிடம் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
இவற்றை இயற்கையான முறையில் பெற வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இயற்கை மூலிகை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மேலும் மூலிகைகள் மட்டும் முதன்மையாக தேர்ந்தெடுத்து தங்களை அழகுபடுத்திக் கொண்டு மற்றவர்கள் முன்னால் அழகாக இருக்க விரும்புகின்றனர்.
உங்களுக்குள் பல சந்தேகங்கள் இருக்கலாம். அதாவது இலையைக் கொண்டு சருமத்தை எப்படி அழகுபடுத்த முடியும் என்ற எண்ணமும் ஏற்படலாம். அது முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும் என்பதே உண்மை.
பல அரிய அருமையான மூலிகைகளை கொண்டு அற்புதமான சரும அழகை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி பெற முடியும்.
சில அற்புதமான மூலிகைகள் இதோ…………
வேப்பிலை
இந்த பூமியில் இருக்கும் அனைத்து இலைகளைக் காட்டிலும் வேப்பிலையையே மிக சிறந்த இயற்கை மூலிகையாக கருதுகின்றனர். இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். இதனை பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில் ஒரு அற்புதமான, அழகான, பளபளப்பு உண்டாகும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
வெண்ணெய் பழம்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இந்தப் பழமானது நமது நாட்டில் கிடைப்பது சற்று கடினமே ஆனால் தற்போது மிகப் பெரிய மால்களில் இந்தப் பழம் எளிதாக கிடைக்கிறது. வெண்ணெய் பழம் என்று கூறப்படும் அவகேடோ இயற்கையாக தோலில் பளபளப்பை ஏற்படுத்துவதாகவும், வறண்ட சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய பழமாகவும் உள்ளது. இப்பழத்தில் அதிக அளவு புரதச் சத்து இருப்பதால் தோலில் ஏற்படும் சேதங்களை குணமாக்க வல்லது.
சந்தனக் கட்டை
இருக்கும் மரங்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததாகும் புனிதமாகவும் புறமாகவும் கருதப்படும் ஒரே மரம் சந்தனமரம். மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும். மருந்துகளிலும், அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப்பொருளாக விளங்குகின்றது. சந்தனம், தோலில் உள்ள வியாதிகள், முகப் பருக்கள், அரிப்பு மற்றும் இதர பிரச்சனைகளையும் குணமாக்க பயன்படுகின்றது. சந்தனத்தை வெளிபுற தோலில் பயன்படுத்தும் போது தோலுக்கு இதமான குளிர்ச்சித்தன்மை கிடைக்கும்.
மஞ்சள்
நமது மண்ணில் விளையக்கூடிய மாணிக்கம் என்று அழைக்கப்படக்கூடிய இந்த மூலிகை மஞ்சள். மஞ்சள் இயற்கையான சரும பாதுகாப்பு மற்றும் பளிச்சென்ற சருமத்தை தரும் சக்தியை கொண்டுள்ளது. வீக்கத்தை குறைக்கும் சக்தியும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தியும் மஞ்சளில் இயற்கையாவே அமைந்திருக்கின்றது. பருக்கள், அரிப்புகள் மற்றும் பருக்களால் உருவாகும் நிறமிகள் ஆகியவற்றை மஞ்சள் நீக்க வல்லது. இதில் இயற்கையிலேயே கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் கொண்டது ஆகையால் இதனை சருமத்தில் பயன்படுத்தும் போது தேவையில்லாத கிருமிகளை அழித்து நமக்கு நன்மைகள் தரும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
கற்றாழை
கற்றாழை நமது தோலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவும் தாவரமாகும். எரிச்சலைக் குறைக்கும் சக்தியும் குணமாக்கும் சக்தியும் கற்றாழைக்கு உண்டு. இந்த குணாதிசயத்தை கொண்ட கற்றாழை வெளிப்புற தோலில் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும் பெரும் பணியையும் செய்யும் திறன் கொண்டுள்ளது.
பாதாம் இலைகள்
பாதாம் என்று அழைக்கப்படும் பாதாம் பருப்பு அதன் எல்லா பாகங்களுமே பயன் தரக்கூடியதாக அமைந்துள்ளது. அதாவது பாதாம்பருப்பை உண்டால் சக்தி அதிகம் கிடைக்கும். அதேபோன்று பாதாம் பிசினை தொடர்ந்து சாப்பிடும்பொழுது ஆண்மை பலப்படும். அதேபோல்தான், பாதாம் இலைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையும் அற்புத குணங்கள் உடையவை. இவை தோலை ஈரப்பதமூட்டுவதிலும், பளபளப்பாக்குவதிலும் சிறந்த பணி செய்யும் இலைகளாகும். பொதுவாகவே குளிர்காலத்தில் உபயோகப்படுத்தும் அழகு சாதன பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
சீமைச்சாமந்தி
மிக சிறந்த இயற்கை மூலிகையாக இருந்து சருமத்தை பாதுகாக்கும் சக்தியை கொண்ட மற்றொரு இலை சீமைச்சாமந்தியின் இலைகளாகும். இவற்றில் பலவித நன்மை கொண்ட குணங்கள் உள்ளன. இதில் உள்ள ஆல்ஃபா பிஸபோலோ (Alpha bisabolo) என்ற திரவம் சுருக்கங்களையும், முதிர்ச்சியால் சருமத்தில் ஏற்படும் கோடுகளையும் குறைக்க உதவி செய்யும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
விச் ஹாசில்
இவ்வகை மூலிகை செடிகள் ஆரோக்கிய சருமத்தை கொடுக்கும் சக்தியை உடையவை. இவை தோலிலிருந்து சுரக்கப்படும் எண்ணெயை கட்டுப்படுத்தி சுத்தமான மற்றும் எண்ணையற்ற சருமத்தை கொடுக்க வல்ல குணம் கொண்டவையாகும். இவை தோல்களில் ஏற்படும் சிவப்புத் தன்மையையும், வீக்கத்தையும் குறைப்பதில் ஆற்றல் மிக்கவையாகும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
துளசி
துளசி இலையில் இருக்கும் பாதுகாப்பு தடுப்பு சக்தி கண்ணின் கருவளையங்கள், பருக்கள் ஆகியவற்றை தடுக்கும் வல்லமையை கொண்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை மூலிகைகள் தான் சருமத்திற்கு அழகையும், இயற்கையான ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லதாக இருக்கின்றன. உங்கள் சருமத்திற்கு ஏற்ற மூலிகையைப் பயன்படுத்தி வித்தியாசத்தை காணுங்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]