Murungai keerai Benefits in Tamil – Poriyal Adai Recipes Sambar Health Drumstick beans முருங்கை கீரை நன்மைகள் moringa leaves benefits
Murungai keerai in tamil
பச்சையாக இருக்கும் எல்லாமே சத்துக்கள் நிறைந்தவை தான். அதிலும் மகுடம் சூட்டிய இளவரசியை திகழ்வது முருங்கைக்கீரை எனும் மகாராணி. கீரைகளின் இலவரசி.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இந்த உலகில் உள்ள மரங்களிலேயே அதிக சத்துக்கள் நிறைந்ததும் உடலின் முழு ஆரோக்கிய மற்றும் ஆயுளை நீடிக்க கூடிய அதிக சத்துக்கள் நிறைந்தது, உடலில் உள்ள முழு உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்து சமன் படுத்த கூடியது இந்த முருங்கைக்கீரை. அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் மருந்தாகவும் விளங்கக்கூடிய முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.
முருங்கை இலை
முருங்கை இலைகளில் இரும்பு, புரதம், தாமிரம், கொழுப்பு, தாதுக்கள், கார்போஹைட்ரேட்கள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்மின் பி காம்ப்ளக்ஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை கொட்டிக் கிடக்கிறது.
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். உடல் அழகும் , பலமும், தெம்பும் கிடைக்கும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
முருங்கை இலை சாறு ரத்தத்தை சுத்தம் செய்வதுடன் , எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் . முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.. தலைவலி, இடுப்பு வலி ,வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
உஷ்ணம் சம்பந்த பட்ட நோய்கள் நீங்கும். சொறி சிரங்கு, பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கைப் பூ செக்ஸ் பலவீனத்தைப் போக்கும். ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கைப் பூவை நாற்பது நாட்கள் உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி சீராகி, இல்லற வாழ்க்கையில் உண்டான இடைஞ்சல்கள் எல்லாம் மருந்து மாத்திரைகளும், பக்கவிளைவுகளும் இல்லாமல் பூரண குணமாகும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
முருங்கைப் பட்டை
முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
முருங்கை விதை
முருங்கை விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணையால் வாயுப்பிடிப்பு, மூட்டுவலி குணமாகும்.
கடுமையான இரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி, இரத்தவிருத்தி, தாது விருத்தி செய்யும்.
முருங்கை வேர்
முருங்கை வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு காசநோய், கீழ்வாயு, முதுகுவலியை குணமாக்கும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இலை, பூ, மரப்பட்டை, வேர் என மொத்த பாகமுமே மனித குலத்தை நோயிலிருந்து மீட்க பயன்படும் முருங்கை…. நமக்கு கிடைத்த வரம் என்று சொல்வது சாலப்பொருந்தும்.
இன்றே இதனை தினமும் உணவில் சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை தமிழரும் முறைப்படி வாழ்வோம்….! தெற்கத்திய கலாச்சாரங்களை என்றே மறப்போம்….!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]