366 – முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது.
1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான்.
1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன.
1795 – ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இசுப்பிரிமொண்ட் சமரை அடுத்து, பிரான்சு தெற்கு நெதர்லாந்தை அதிகாரபூர்வமாகக் கைப்பற்றியது.
1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
1800 – எசுப்பானியா லூசியானாவை பிரான்சிடம் தந்தது. முப்பது மாதங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா அதனை பிரான்சிடம் இருந்து வாங்கியது.
1814 – நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியன்னா மாநாடு கூடியது.
1827 – உருசிய-பாரசீகப் போர்: உருசிய இராணுவம் யெரெவானைக் கைப்பற்றியது. ஆர்மீனியாவில் முசுலிம்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
1833 – இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.[1]
1843 – நியூசு ஆப் த வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிடப்பட்டது.
1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
1880 – இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
1887 – பிரித்தானியா பலூசிஸ்தானைக் கைப்பற்றியது.
1892 – இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகமானது.[2]
1898 – உருசியாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
1910 – லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1918 – முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கசு நகரைக் கைப்பற்றினர்.
1936 – பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் தேசிய அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் செருமனியப் படைகள் வார்சாவா நகரைக் கைப்பற்றின.
1942 – இரண்டாம் உலகப் போர்:: அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஆங்காங்கில் இருந்து பிரித்தானியப் போர்க் கைதிகளை ஏற்றி வந்த லிசுபன் மாரு என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
1943 – நாபொலியின் நான்கு நாட்கள்: நேச நாடுகளின் படைகள் நாபொலி நகரைக் கைப்பற்றின.
today in history india, this day in history wikipedia, born on this day in history, this day in history funny, this day in music history, what happened on this day what was invented today in history this week in history