This Day in History – History on this day
History on this day – 25 செப்டம்பர்
- 1396 – உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார்.
- 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பெருங்கடல் ஒன்றை அடைந்தார். இது பின்னர் பசிபிக் பெருங்கடல் என்ற பெயரைப் பெற்றது.
- 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது.
- 1789 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க அரசியலமைப்பிற்கு உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.
- 1862 – செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
- 1868 – இளவரசர் அலெக்சி அலெக்சாந்திரொவிச்சை ஏற்றிச் சென்ற உருசியப் பேரரசின் அலெக்சாந்தர் நேவ்ஸ்கி கப்பல் யுட்லாண்டு அருகே மூழ்கியது.
- 1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை எசுப்பானியாவில் இயக்கிக் காட்டப்பட்டது. தொலைக் கட்டுப்படுத்தி பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
- 1926 – அடிமை வணிகத்தைத் தடுக்கும் பன்னாட்டு ஒப்பந்தம் உலக நாடுகள் அணியின் ஆதரவில் கையெழுத்திடப்பட்டது.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: பெரும் இனவழிப்பில் இருந்து தப்பிய யூதர்களை அகதிகளாக ஏற்க சுவிட்சர்லாந்து மறுத்தது.
- 1956 – அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது.
- 1957 – ஐக்கிய அமெரிக்காவில் ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 கருப்பின மாணவர்கள் 300 இராணுவத்தினர்களின் பாதுகாப்புடன் பாடசாலை சென்றனர்.
- 1959 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார்.
- 1962 – வடக்கு ஏமன் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. ஏமன் மன்னர் இமாம் அல்-பத்ர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அப்துல்லா அல்-சலால் ஏமனை ஒரு குடியரசாக்கி, தன்னை அதன் அரசுத்தலைவராக அறிவித்தார்.
- 1962 – அல்சீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1964 – மொசாம்பிக்கில் போர்த்துகலுக்கு எதிரான விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1978 – கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் 144 பேர் உயிரிழந்தனர்.
- 1981 – பெலீசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
- 1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
- 1992 – செவ்வாய்க் கோளை நோக்கிய “செவ்வாய் நோக்கி” என்ற விண்கலத்தை நாசா ஏவியது. 11 மாதங்களின் பின்னர் இவ்விண்கலம் செயலிழந்தது.
- 1992 – யாழ்ப்பாணம், பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.
- 2002 – குஜராத் மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற வன்முறையில் 32 பேர் உயிரிழந்தனர்.
- 2003 – சப்பானில் ஒக்காய்டோ என்ற இடத்தில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 800 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்..
- 2015 – இலங்கையின் மலையகத்தில் இறம்பொடையில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
- 2017 – இந்தோனேசியாவில் பாலித் தீவில் ஆகூங்க் மலையில் எரிமலை வெடித்தது.
இன்று பிறந்தவர்கள் – 23 செப்டம்பர்
- 1644 – ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1710)
- 1846 – விளாதிமிர் கோப்பென், உருசிய-செருமானிய அறிவியலாளர், காலநிலை ஆய்வாளர் (இ. 1940)
- 1848 – செர்கேய் பாவ்லோவிச் கிளாசனாப், சோவியத் ஒன்றிய வானியலாளர் (இ. 1937)
- 1857 – மூலம் திருநாள், திருவிதாங்கூர் மன்னர் (இ. 1924)
- 1881 – லூ சுன், சீன எழுத்தாளர் (இ. 1936)
- 1897 – வில்லியம் பால்க்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1962)
- 1899 – உடுமலை நாராயணகவி, தமிழகக் கவிஞர், பாடலாசிரியர் (இ. 1981)
- 1914 – தேவிலால், இந்திய அரசியல்வாதி (இ. 2001)
- 1916 – தீனதயாள் உபாத்தியாயா, இந்தியப் பொருளியலாளர், சமூகவியலாளர் (இ. 1968)
- 1920 – சதீஷ் தவான், இந்தியப் பொறியியலாளர் (இ. 2002)
- 1922 – நாத் பாய், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1971)
- 1924 – அ. பூ. பர்தன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 2016)
- 1939 – பெரோசு கான், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2009)
- 1946 – பிசன் சிங் பேடி, இந்தியத் துடுப்பாளர்
- 1952 – பெல் ஹூக்சு, அமெரிக்க எழுத்தாளர்
- 1952 – கிறிஸ்டோபர் ரீவ், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (இ. 2004)
- 1968 – வில் சிமித், அமெரிக்க நடிகர், பாடகர்
- 1977 – திவ்யா தத்தா, இந்தி, பஞ்சாபி நடிகை
- 1977 – ஏ. ஆர். முருகதாஸ், தமிழகத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர்
இன்று இறந்தவர்கள் – 23 செப்டம்பர்
- 1777 – யோகான் என்றிச் இலாம்பெர்ட், சுவிட்சர்லாந்து-செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1728)
- 1958 – ஜான் பி வாட்சன், அமெரிக்க உளவியலாளர் (பி. 1878)
- 2003 – எட்வர்டு செயித், பாலத்தீன-அமெரிக்க மெய்யியலாளர் (பி. 1935)
- 2007 – ஜனா கிருஷ்ணமூர்த்தி, தமிழக அரசியல்வாதி (பி. 1928)
- 2011 – வாங்கரி மாத்தாய், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கென்ய சூழலியலாளர் (பி. 1940)
- 2017 – பீலி சிவம், தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1938)
- 2018 – பி. வி. எஸ். வெங்கடேசன், தமிழக அரசியல்வாதி (பி. 1947)
- 2020 – எஸ். பி. பாலசுப்ரமணியம், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1946)
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
today in history india, this day in history wikipedia, born on this day in history, this day in history funny, this day in music history, what happened on this day what was invented today in history this week in history