கிமு 46 – யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான்.
1087 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான்.
1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
1371 – செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
1580 – சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.
1687 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்து மீதான வில்லியமின் முற்றுகையை ஆம்ஸ்டர்டம் நகரசபை ஆதரித்து வாக்களித்தது.
1687 – ஏதென்சு நகரத்தை முற்றுகையிட்ட உதுமானியரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.
1777 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின.
1799 – சூரிக்கில் அலெக்சாந்தர் கொர்சக்கோவ் தலைமையில் இடம்பெற்ற இரண்டாவது சமரில் ஆஸ்திரிய-உருசியப் படைகள் பிரான்சிய-சுவிட்சர்லாந்து படைகளிடம் தோற்றன.
1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.
1907 – நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.
1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபெற்றனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.
1950 – கொரியப் போர்: ஐநா ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றின.
1953 – ஐக்கிய இராச்சியத்தில் சீனி மீதான பங்கீட்டு முறை நிறுத்தப்பட்டது.
1954 – சப்பானின் தொடருந்துப் படகு டோயா மாரு சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர்.
1959 – முதல் நாளில் சுடப்பட்டுப் படுகாயமடைந்த இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இறந்தார்.
1959 – சப்பானை சூறாவளி வேரா தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
1960 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்சனுக்கும், ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் சிகாகோவில் இடம்பெற்றது.
1960 – பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
1973 – அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் மிகக் குறைந்த நேரத்தில் பறந்து சாதனை நிலைநாட்டியது.
1980 – மியூனிக் நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 211 பேர் காயமடைந்தனர்.
1983 – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
1984 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை சீனாவிடம் 1997 இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.
1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து உயிர்துறந்தார்.
1997 – இந்தோனேசியாவின் கருடா விமானம் மேடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர்.
1997 – இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.
2002 – செனிகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
2007 – வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
2008 – சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற சாதனை படைத்தார்.
2009 – பிலிப்பீன்சு, சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளை கெத்சானா சூறாவளி தாக்கியதில் 700 பேர் உயிரிழந்தனர்.
today in history india, this day in history wikipedia, born on this day in history, this day in history funny, this day in music history, what happened on this day what was invented today in history this week in history