This Day in History – History on this day
History on this day – 28 செப்டம்பர்
- 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம் இங்கிலாந்தில் தரையிறங்கினான்.
- 1238 – அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான்.
- 1322 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் லூயிசு ஆஸ்திரியாவின் முதலாம் பிரெடெரிக்கை மூல்டோர்ஃப் சமரில் வென்றார்.
- 1781 – அமெரிக்கப் புரட்சி: அமெரிக்கப் படைகள் பிரெஞ்சுக் கடற்படைகளின் உதவியுடன் வர்ஜீனியா, யோர்க்டவுன் நகரை முற்றுகையிட்டன.
- 1795 – யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.[1]
- 1844 – முதலாம் ஒஸ்கார் சுவீடன் மன்னராக முடிசூடினார்.
- 1867 – டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
- 1868 – சல்கொலேயா போரை அடுத்து எசுப்பானியாவின் அரசி இரன்டாம் இசபெல்லா பிரான்சுக்குத் தப்பி ஓடினார்.
- 1871 – அடிமைகளுக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் தீர்மானத்தை பிரேசில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
- 1889 – நிறை மற்றும் அளவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோல் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.
- 1895 – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டது.
- 1901 – பிலிப்பீனியத் தீவிரவாதிகள் கிழக்கு சமார் பகுதியில் நடத்திய தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
- 1919 – அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் ஒமாகா நகரில் கறுப்பினத்தவருக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரங்களில் மூவர் இறந்தனர்.
- 1928 – அலெக்சாண்டர் பிளெமிங் தனது ஆய்வுகூடத்தில் பாக்டீரியாக் கொல்லி ஒன்று வளருவதை அவதானித்தார். இது பின்னர் பெனிசிலின் எனப் பெயர் பெற்றது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சாவா செருமனியிடம் வீழ்ந்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாட்சிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.
- 1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.
- 1951 – சிபிஎசு நிறுவனம் முதலாவது வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொது மக்களுக்கு விற்பனைக்கு விட்டது. ஆனாலும், ஒரு மாதத்தினுள் இப்பெட்டிகள் விற்பனையில் இருந்து எடுக்கப்பட்டன.
- 1960 – மாலி, செனிகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
- 1961 – டமாசுகசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா இணைந்த ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது
- 1970 – எகிப்தியத் தலைவர் ஜமால் அப்துல் நாசிர் மாரடைப்பினால் காலமானார்.
- 1992 – பாக்கித்தானின் பன்னாட்டு விமானம் ஒன்று நேப்பாளத்தில் மலையில் மோதியதை அடுத்து, அதில் பயணம் செய்த அனைத்து 167 பேரும் உயிரிழந்தனர்.
- 1993 – யாழ்ப்பாணத்தில் கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட “யாழ்தேவி இராணுவ நடவடிக்கை” விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
- 1994 – பால்ட்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்தோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்.
- 1995 – இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீன், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத் காசாக் கரை தொடர்பான இடைக்கால உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
- 1995 – பாப் டெனார்டு என்ற பிரெஞ்சு போர் வீரன் தனது கூலிப் படைகளுடன் சேர்ந்து கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினான்.
- 2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.
- 2009 – கினியின் இராணுவ அரசு ஆர்ப்பாடக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 1400 கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர்.
- 2018 – இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுகளில் இடம்பெற்ற 7.5 Mw அளவு நிலநடுக்கம் பெரும் ஆழிப்பேரலையை ஏற்படுத்தியதில் 4,340 பேர் உயிரிழந்தனர்,
இன்று பிறந்தவர்கள் – 28 செப்டம்பர்
- கிமு 551 – கன்பூசியஸ், சீன மெய்யியலாளர் (இ. கிமு 479)
- 1852 – ஆன்றி முவாசான், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (இ. 1907)
- 1852 – இசிசு போகுசன், பிரித்தானிய வானியலாளர் (இ. 1945)
- 1907 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், புரட்சியாளர் (இ. 1931)
- 1918 – வசீலி சுகோம்லின்சுக்கி, உக்ரைனியக் கல்வியாளர் (இ. 1970)
- 1920 – வீ.கே, ஈழத்து ஓவியர், எழுத்தாளர்
- 1929 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி
- 1932 – விக்டர் அரா, சிலி நாட்டுப் பாடகர், இயக்குநர் (இ. 1973)
- 1934 – பிரிஜிட் பார்டோ, பிரான்சிய நடிகை
- 1947 – துரை. மனோகரன், ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர்
- 1947 – சேக் அசீனா, வங்காளதேசத்தின் 10வது பிரதமர்
- 1955 – ஸ்ரொபோன் டியோன், கனடிய அரசியல்வாதி
- 1966 – பூரி ஜெகன்நாத், இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
- 1968 – நவோமி வாட்ஸ், ஆங்கிலேய-ஆத்திரேலிய நடிகை
- 1974 – சசிகுமார், தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்
- 1975 – இசுட்டீவ் கிளார்க், ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1982 – ரன்பீர் கபூர், இந்திய நடிகர்
இன்று இறந்தவர்கள் – 28 செப்டம்பர்
- 935 – முதலாம் வென்செஸ்லாஸ், செக் நாட்டுப் புனிதர் (பி. 907)
- 1694 – காப்ரியல் மௌடன், பிரான்சியக் கணிதவியலாளர், இறையியலாளர் (பி. 1618)
- 1891 – ஏர்மன் மெல்வில், அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1819)
- 1895 – லூயி பாஸ்ச்சர், பிரான்சிய இயற்பியலாளர், நுண்ணுயிரியலாளர் (பி. 1822)
- 1953 – எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1889)
- 1970 – ஜமால் அப்துல் நாசிர், எகிப்தின் 2வது அரசுத்தலைவர் (பி. 1918)
- 1978 – முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (பி. 1912)
- 1989 – பேர்டினண்ட் மார்க்கோஸ், பிலிப்பீன்சின் 10வது அரசுத்தலைவர் (பி. 1917)
- 1991 – சங்கர் குஹா நியோகி, இந்திய-சத்தீசுக்கர் தொழிற்சங்கத் தலைவர் (பி. 1943)
- 1994 – கே. ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிகர் (பி. 1917)
- 1998 – சாருமதி, ஈழத்துக் கவிஞர் (பி. 1947)
- 2004 – முல்க் ராஜ் ஆனந்த், இந்திய எழுத்தாளர் (பி. 1906)
- 2012 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்திய அரசியல்வாதி, 1வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1928)
- 2016 – சிமோன் பெரெஸ், இசுரேல் பிரதமர், அரசுத்தலைவர் (பி. 1923)
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
today in history india, this day in history wikipedia, born on this day in history, this day in history funny, this day in music history, what happened on this day what was invented today in history this week in history