This Day in History – History on this day
History on this day – 30 செப்டம்பர்
- 1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார்.
- 1551 – சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது.
- 1744 – பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர்.
- 1791 – மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது.
- 1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
- 1882 – தாமசு எடிசனின் முதலாவது வணிக நீர்மின் உற்பத்தி நிலையம் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
- 1888 – கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.
- 1935 – அமெரிக்காவில் அரிசோனா, நெவாடா மாநிலங்களைப் பிரிக்கும் ஊவர் அணை கட்டி முடிக்கப்பட்டது.
- 1938 – செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை செருமனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்சு, செருமனி, இத்தாலி ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன. சோவியத் ஒன்றியம், செக்கோசிலவாக்கியா ஆகியன இந்நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை.
- 1938 – “பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்” நடத்தப்படுவது உலக நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் நாடுகடந்த அரசின் பிரதமராக விளாதிசுலாவ் சிக்கோர்ஸ்கி தெரிவு செய்யப்பட்டார்.
- 1945 – இங்கிலாந்தில் எர்ட்ஃபோர்ட்சயர் தொடருந்து விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
- 1946 – இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நேரடித் தொலைபேசி இணைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.[1]
- 1947 – பாக்கித்தான் ஐநாவில் இணைந்தது.
- 1949 – சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு செருமனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது.
- 1950 – இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
- 1954 – ஐக்கிய அமெரிக்கா நாட்டிலசு என்ற உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் நீர்மூழ்கிக் கப்பலை சேவைக்கு விட்டது.
- 1965 – இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து ஏறத்தாழ 500,000 பேரைக் கொன்று குவித்தார்.
- 1966 – பெக்குவானாலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானா குடியரசு ஆகியது.
- 1967 – இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1980 – ஈதர்நெட் விவரக்கூற்றுகள் வெளியிடப்பட்டன.
- 1993 – லாத்தூர் நிலநடுக்கம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லாத்தூர், ஒசுமனாபாத் நகரங்களில் இடம்பெற்ற 6.2 அளவு நிலநடுக்கத்தில் 9,748 பேர் உயிரிழந்தனர்.
- 1995 – தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
- 1999 – சப்பான் டொக்கைமூரா அணுமின் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
- 2001 – மத்தியப் பிரதேசம், மைன்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர்.
- 2003 – தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
- 2005 – சர்ச்சைக்குரிய யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியானது.
- 2007 – இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக வாகையாளர் ஆனார்.
- 2008 – ராஜஸ்தானில் சாமுண்டா தேவி மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 177 பேர் இறந்தனர்.
- 2009 – சுமாத்திராவை 7.6 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 1,115 பேர் உயிரிழந்தனர்.
- 2016 – ஆம்ஸ்டர்டம் அருங்காட்சியகத்தில் இருந்து 2002 டிசம்பர் 2 இல் திருடப்பட்ட வின்சென்ட் வான் கோவின் $100 மில்லியன் மதிப்புள்ள இரண்டு ஓவியங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டன.
இன்று பிறந்தவர்கள் – 30 செப்டம்பர்
- 1207 – ரூமி, பாரசீகக் கவிஞர் (இ. 1273)
- 1550 – மைக்கேல் மேசுட்லின், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1631)
- 1864 – சுவாமி அகண்டானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1937)
- 1870 – சான் பத்தீட்டு பெரென், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1942)
- 1900 – எம். சி. சாக்ளா, இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 1981)
- 1913 – ஆர். ராமநாதன் செட்டியார், தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1995)
- 1922 – இருசிகேசு முகர்ச்சி, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 2006)
- 1928 – எலீ வீசல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க எழுத்தாளர் (இ. 2016)
- 1931 – எம். ஏ. எம். ராமசாமி, தமிழகத் தொழிலதிபர், அரசியல்வாதி (இ. 2015)
- 1941 – கமலேஷ் சர்மா, பொதுநலவாய நாடுகளின் 5வது பொதுச் செயலாளர்
- 1964 – மோனிக்கா பெலூச்சி, இத்தாலிய நடிகை
- 1966 – சங்கர் பாலசுப்பிரமணியன், இந்திய-பிரித்தானிய வேதியியலாளர்
- 1980 – மார்டினா ஹிங்கிஸ், சுவிட்சர்லாந்து டென்னிசு வீராங்கனை
- 1986 – ஒலிவியர் ஜிரூட், பிரான்சியக் கால்பந்தாட்ட வீரர்
- 1986 – மார்ட்டின் கப்டில், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்
இன்று இறந்தவர்கள் – 30 செப்டம்பர்
- 420 – ஜெரோம், உரோமானியப் புனிதர் (பி. 347)
- 1897 – லிசியே நகரின் தெரேசா, பிரான்சியப் புனிதர் (பி. 1873)
- 1974 – இராய. சொக்கலிங்கம், தமிழறிஞர், கவிஞர் (பி. 1898)
- 1985 – சார்லஸ் ரிக்டர், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1900)
- 2001 – மாதவ்ராவ் சிந்தியா, இந்திய, மத்தியப் பிரதேச அரசியல்வாதி (பி. 1945)
- 2004 – காமினி பொன்சேகா, சிங்கள நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1936)
- 2008 – ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (பி. 1926)
- 2010 – சந்திரபோஸ், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர்
- 2011 – ரால்ஃப் ஸ்டைன்மன், நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1943)
- 2015 – கு. திருப்பதி, தமிழக அரசியல்வாதி (பி. 1930)
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
today in history india, this day in history wikipedia, born on this day in history, this day in history funny, this day in music history, what happened on this day what was invented today in history this week in history