108 Sri Lakshmi Devi Potri | 108 ஸ்ரீ லக்ஷ்மி தேவி போற்றி | தமிழ் பாடல் வரிகள் Navarathri Special
வரலட்சுமிக்கு விரதம் இருந்து நோன்பு எடுக்கும் பெண்கள் லக்ஷ்மி தேவிக்கு உகந்த 108 ஸ்ரீ லக்ஷ்மி போற்றியை சொல்லி வழிபட்டு வந்தால் சகல செல்வங்களும் சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நமது வாழ்வில் செல்வங்களும், நிம்மதியும், மன அமைதியையும், நல்ல உறவுகளையும், நல்ல நட்புகளையும், நல்லொழுக்கங்களையும் அருள்வது ஸ்ரீலஷ்மி தேவி ஆகும்.
Lakshmi 108 potri
ஓம் திருவே போற்றி
ஓம் திருவளர் தாயே போற்றி
ஓம் திருமாலின் தேவி போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
ஓம் திருஞான வல்லி போற்றி
ஓம் திருவருட் செல்வி போற்றி
ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
ஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி
ஓம் தினமெமைக் காப்பாய் போற்றி
ஓம் தீபசோதியே போற்றி
ஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றி
ஓம் தூப ஜோதியே போற்றி
ஓம் துயரம்தீர்த் தருள்வாய் போற்றி
ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
ஓம் திருவமு தருள்வாய் போற்றி
ஓம் அன்னையே அருளே போற்றி
ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
ஓம் அயன்பெறு தாயே போற்றி
ஓம் அனைவருக்கும் அருள்வாய் போற்றி
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஓம் அமரர் குல விளக்கே போற்றி
ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
ஓம் அன்பருக் கினியாய் போற்றி
ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் ஆருயிர்க் குயிரே போற்றி
ஓம் ஆவிநல் வடிவே போற்றி
ஓம் ஆக்கம் தருள்வாய் போற்றி
ஓம் இச்சை கிரியை போற்றி
ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றி
ஓம் இன்பப் பெருக்கே போற்றி
ஓம் இகபர சுகமே போற்றி
ஓம் ஈகையின் பொலிவே போற்றி
ஓம் ஈடிலா அன்னை போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண வல்லி போற்றி
ஓம் ஓங்கார சத்தி போற்றி
ஓம் ஒளிமிகு தேவி போற்றி
ஓம் கற்பக வல்லி போற்றி
ஓம் காமரு தேவி போற்றி
ஓம் கனக வல்லியே போற்றி
ஓம் கருணாம் பிகையே போற்றி
ஓம் குத்து விளக்கே போற்றி
ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
ஓம் மங்கல விளக்கே போற்றி
ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
ஓம் தூங்காத விளக்கே போற்றி
ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
ஓம் பங்கஜ வல்லி போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் பொன்னி அம்மையே போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் நாரணன் நங்கையே போற்றி
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
ஓம் நவரத்தின மணியே போற்றி
ஓம் நவநிதி நீயே போற்றி
ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் ஆதிலட்சுமியே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி
ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தனதானியம் தருவாய் போற்றி
ஓம் விஜயலட்சுமியே போற்றி
ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
ஓம் முத்துலட்சுமியே போற்றி
ஓம் முக்தியை அருள்வாய் போற்றி
ஓம் பூவேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
ஓம் கண்ணே எம் கருத்தே போற்றி
ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
ஓம் விண்ணே எம் விதியே போற்றி
ஓம் விவேகம் தருள்வாய் போற்றி
ஓம் பொன்னேநன் மணியே போற்றி
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
ஓம் போகம் தருள்வாய் போற்றி
ஓம் பூதேவி தாயே போற்றி
ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
ஓம் சீதேவி தாயே போற்றி
ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
ஓம் மதிவதன வல்லி போற்றி
ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
ஓம் நித்திய கல்யாணி போற்றி
ஓம் நீதிநெறி அருள்வாய் போற்றி
ஓம் கமலக்கன்னி போற்றி
ஓம் கருத்தினி லமர்வாய் போற்றி
ஓம் தாமரைத் தாயாய் போற்றி
ஓம் தவநிலை அருள்வாய் போற்றி
ஓம் கலைஞானச் செல்வி போற்றி
ஓம் கலைஞருக் கருள்வாய் போற்றி
ஓம் அருள்ஞானச் செல்வி போற்றி
ஓம் அறிஞருக் கருள்வாய் போற்றி
ஓம் எளியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
ஓம் வறியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வேத வல்லியே போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் பிறர்பொருள் கவர எண்ணாப் பெரியர்க் கருள்வாய் போற்றி
ஓம் நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்கருள்வாய் போற்றி
ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க் கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அருள்மிகு லட்சுமிதாயே
போற்றி போற்றி போற்றி
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
varalakshmi vratham, 108 potri, lakshmi 108 potri, 108 போற்றி, வரலட்சுமி விரதம், லட்சுமி, ஸ்ரீலட்சுமி தேவிக்கு உகந்த 108 போற்றி || lakshmi 108 potri