Ways to Solve children Back Pain
சிறுவர், சிறுமிகளில் கூடவா முதுகுவலி என்று யோசிக்கிறீர்கள் தானே! ஆம். இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் கூட முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இது நிஜம்தான் நாம் கடைபிடிக்கும் வாழ்வுமுறை இதற்கு முதன்மையான காரணம். முதலில் சிறுவர்கள் சுமந்து செல்லும் புத்தகப்பை அவர்களுக்கு முதுகு வலி ஏற்படக் காரணமாயிருப்பதை காணலாம்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
முதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில் கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
இதனை அடுத்து சிறுவர்கள் முதுகு வலி ஏற்பட மிக முக்கிய காரணமாய் இருப்பது அலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கணினியுமே ஆகும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
முதுகு வலி தீர்க்க வழிகள்:
- சிறார்களுடைய முதுகுப் பைகள் சரியான / குறைந்த எடையுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- முதுகுப்பையில் உள்ள வார்களால் (Strap) பையை சரிவர, அதாவது மேல் முதுகிற்கும், நடுமுதுகிற்குமாய் இருக்குமாறு பிணைக்க வேண்டும்.
- எல்லா நேரங்களிலும் நேராய் / நிமிர் நேர்வாய் உட்கார அறிவுறுத்த வேண்டும்.
- அமர்ந்து கொண்டு படிக்கும் போதும், எழுதும் போதும் முதுகிற்குத் தேவையான ஆதாரத்துடன்(Support) அமர வேண்டும்.
- எந்த ஒரு விளையாட்டையும் விளையாடும் முன்னர் முறையான ஆடல் உறுதி பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.
- விளையாடிய பின்னர் அதிக களைப்படைந்தால் அவ்விளையாட்டு அவர்களின் உடல் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும்.
- தொடர்ச்சியான / இடைவிடாத வலி இருப்பின் அதனை பெற்றோரிடம் அல்லது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
- வைட்டமின் டி, எலும்புகள் வலுவாகவும், தசைகள் வலிவடையவும் உதுவுகிறது. குழந்தைகளில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதா என அறிவது நல்லது.
- முறையான மற்றும் பொருத்தமான உடற்பயிற்சித் திட்டம். உங்களுடைய குழந்தைகள் சரியான தோற்ற அமைவு (Posture) நிலையைப் பெறவும், முதுகு வழியை குறைக்கவும் உதவும்.
- உங்கள் குழந்தை உடல் வலிமை தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சி மற்றும் இயன்முறை மருத்துவரிடம், உடற்பயிற்சிகள் வடிவமைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]