மெரினாவில் பேனா சின்னம் அமைக்க 15 நிபந்தங்களுடன் மத்திய அரசு அனுமதி | central government has given permission to set up a pen Memorial for Karunanidhi at the marina with 15 conditions
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையில் பேனா சின்னம் அமைக்கப்பட உள்ளது. அந்த பேனாச்சிலையை அமைக்க மத்திய அரசு பதினைந்து நிபந்தங்களுடன் அனுமதி வழங்கி உள்ளது.
பேனா நினைவுச்சின்னம்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நிவினை விட வளாகத்துக்குள் கருணாநிதிக்கு இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. நினைவிடம் அமைந்துள்ள இடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக ரூபாய் 81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பேனா வடிவில் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதனை சட்டமன்றத்திலும் அறிவித்தது.
இதற்காக கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து பின்பகுதி வழியாக நுழைவாயில் அமைத்து அதன் வழியாக பொதுமக்கள் சென்று கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிலத்திலும் கடலிலும் இரும்பினால் ஆன பாலம் மற்றும் கண்ணாடி சார்ந்த தடை அமைப்புடன் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்ட வரைவானது தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டத்தில் உள்ள அலுவலகத்திலும் மாநில அளவிலும் மும்மொழிகள் பெறப்பட்டு மத்திய அரசின் அனுமதி கோரி கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்துஉயர்நிலை அதிகாரிகள் ஆய்வு செய்து முதற்கட்ட அனுமதி வழங்கினர். அதன்பின்னர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதி கேட்டு தமிழக அரசு பொதுப்பணித்துறை மூலம் கடிதம் அனுப்பியது.
கருத்து கேட்பு கூட்டம்
அதனைத் தொடர்ந்து அதை பரிசீலிக்கும் விதமாக கடலோர மக்கள் மற்றும் மீனவர்களிடம் கருத்து கேட்க ப்பட்டு பரிசீலனையில் இருந்தது.
இந்த நிலையில் அனைத்து விதமான ஆய்வுகளும் முடிந்து மதிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் ஏப்ரல் 17-ல் ஆலோசனை நடத்தினர். கடல் நினைவுச்சின்னம் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படாது எனவும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் முடிவுக்கு வந்தனர்.
இந்த நிலையில் தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் அதனை சார்ந்த குழுவினர் 15 நிபந்தனைகளுடன் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி வழங்கி உள்ளது.
நிபந்தனைகள்
போக்குவரத்து மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுதல் ஆகியவற்றுக்கான திட்டமிடுதலை முறையாக அமல்படுத்த வேண்டும், நினைவு சின்னத்துக்கு சரியான சாலை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், காணவரும் பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்காக உரிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், நினைவுச் சின்னம் தொடர்பாக நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் அதனை கடைபிடிக்க வேண்டும், கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிடும் குஞ்சுகள் பொறிக்கும் காலத்தில் நினைவு சின்னத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என இது போன்ற பதினைந்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தால் திட்ட அனுமதி திரும்ப பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு பேனாச்சின்னம் அமைக்க அனுமதி அளித்துள்ள இந்த நிலையில் வருகின்ற ஜூலை 3 ஆம் தேதி கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் அன்று நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல் நாட்டும் வகையில் அரசு சார்பில் பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]