Does god exist, Who created god and Who is god in your life according to the bible and the name of the god meaning in tamil language
உண்மையில் கடவுள் இருக்கிறாரா?
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிவது எப்படி..? கடவுள் என்பவர் ஒருவர் உண்டா இல்லையா, என்று ஒரே வார்த்தையில் சொல்ல முடியுமா….?
கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ, ஒரே வார்த்தையில் சொல்ல முடியும். அப்படி சொல்வதால் உங்களால் அனுபவத்தில் எதையாவது உணர முடியுமா..? நான் சொல்வதை நம்புவீர்கள்!! அல்லது நம்பாமலும் போவீர்கள்…. ஆனால் கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வி உங்களுக்குள் அப்படியேதான் இருக்கும்…!
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது என்பதை முதலில் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். முதலில் இருக்கிறாரா இல்லையா என்று தேடுங்கள். எங்கே தேடுவது என்கிறீர்களா…? உங்களுக்குள்ளேயே தேடுங்கள்…! கடவுள் உண்டா இல்லையா என்பதை நீங்களே உணர முயலுங்கள்……
இது சம்பந்தமாக ஒரு குட்டி கதை
ஒரு முறை புத்தரை சந்திப்பதற்கு ஒரு மனிதன் வந்தார். அதிகாலை நேரம் அது. இருள் விலகாத பொழுதில் அவர் வந்திருந்தார். அந்த ஊரின் மிகப்பெரிய கடவுள் பக்தர் அவர். அவருக்கு கடவுள் இருப்பது தெரியும்.
ஆனால் ஒரு சந்தேகம் வந்துவிட்டது அவருக்குள். ஞானம் அடைந்த மனிதன் இங்கே இருக்கிறாரே அவரையே சென்று கேட்போம் என்று புத்தரை சந்திக்க வந்திருக்கிறார். அவரை பார்க்க வந்தது கூட வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது என்பதாலே அவர் சீக்கிரம் வந்திருக்கிறார்..
புத்தரின் அருகில் சென்று அமைதியாக கேட்கிறார் “கடவுள் இருக்கிறாரா இல்லையா”?
உடனே அவரை ஆழ்ந்து பார்த்துவிட்டு புத்தர் சொன்னார் “கடவுள் இல்லை” என்று. உடனே புத்தரின் சீடர்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சு.
இந்த உண்மையை தெரிந்து கொள்ளத்தான் அவர்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து இருந்தனர். கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டார். இனிமேல் என்ன என்று நிம்மதி அடைந்தார்கள்.
அன்று இரவு ஊர் எல்லாம் அடங்கிய பிறகு மற்றும் ஒருவர் வந்தார். அவர் ஒரு நாத்திகவாதி. இருளில் மறைந்து நின்று தயங்கித் தயங்கி புத்தரிடம் கேட்டார். “கடவுள் இருக்கிறாரா” என்று. அவரை நிமிர்ந்து பார்த்து விட்டு தீர்மானமாக சொன்னார் புத்தர் “கடவுள் இருக்கிறார்” என்றார். சீடர்கள் மத்தியில் பெரும் குழப்பம்.
உடனே புத்தர் தன் சீடர்களுக்கு கூறினார் கடவுள் இருக்கிறார் என்று நம்பினால் இருக்கிறார் இல்லை என்று நம்பினால் இல்லை.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இங்கே முக்கியமில்லை.
ஏனெனில் மற்றவர்களின் அபிப்பிராயங்களை வைத்துக் கொண்டு கடவுள் விஷயத்தில் முடிவெடுக்கக் கூடாது.
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று உங்களுக்குத் தெரியாது என்பதை முதலில் ஒப்புக் கொள்ளுங்கள். இருக்கிறாரா? இல்லையா… என்று தேடுங்கள். எங்கே தேடுவது என்கிறீர்களா? உங்களுக்குள்ளேயே தேடுங்கள். கடவுள் உண்டா… இல்லையா… என்பதை நீங்களே உணர முடியும்.
இந்த மண்ணில் விளைவதைத்தான் நீங்கள் சாப்பிடுகிறீர்கள். அந்தச் சாப்பாடு உங்களுக்குள் போய் உங்களுடைய உடலை முழுமையடையச் செய்கிறது. அப்படிப் பார்த்தால் நீங்கள் சாப்பிடுகிற எதுவுமே மண்தான். மண்ணை உட்கொண்டு அதை மனிதனாக்குகிற சக்தி உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்றால் அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story