True love kavithai tamil
உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே
நம்முடைய சூழ்நிலையை
புரிந்துக் கொண்டு எல்லா
நிலையிலும் நம்மோடு இருக்கும்
உறவு கிடைப்பது வரம்
எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்
சூரியனைப் பார்த்து பூக்கும்
சூரியகாந்தி பூ போல!
நீ என்னை பார்த்த உடனே
முகம் பூக்கும் என்பதை நான் அறிவேன்.
காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன்
நானும்…
காதல் என்பது மூன்று எழுத்து தான்
ஆனால் இந்த காதலை தேடி பலர்
தலையெழுத்தையே தொலைக்கின்றனர்.
மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது…
ஒருவர் மீது காதல் வர
ஒரு காரணம் இருக்கும்
ஆனால் அந்த காரணம்
தான் யாருக்கும் தெரிவதில்லை
ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க…
உன் அழகை ஆராய்ந்து பார்க்க
நான் ஆராய்ச்சியாளரும் இல்லை!
உன் அழகால் என்னை கொல்ல
நீ ஒன்றும் கொலை காரியும் இல்லை!
ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்…..
ஒரு முறை
நோக்கிடுயென்
பார்வையை
யார்
பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை
தொடருது
பெண்ணே உன் விழிகள்
பேசும் வார்த்தைகள்
எனக்கு புரியவில்லை
ஆனால் உன் காதலின்
மௌனம் என்னை பேச வைக்கிறது.
உன்னிதய
துடிப்போடு
என்பெயரும்
கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது….
நம்மை நேசிக்க ஆயிரம்
பேர் இருந்தாலும் நாம் நேசிக்கும்
ஒருவரை போல் ஆகி விட முடியாது
விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை…
அன்பிற்கும் பிறர் அறியாமல்
அடைத்து வைக்கும் தாழ் உண்டோ ?
மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்…!
என் இதயத்தை துடிக்க வைத்தாய்!
என் உயிருக்குள் உயிராய் வந்தாய்!
இறுதியில் உன் காதலையும் தந்தாய்.
அடைமழையில்
தப்பித்து
உன் அனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்
நம்மை நேசிப்பவர்களை
மகிழ்ச்சியாக வைத்திருப்பது
தான் அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பு
நீ
கவனிக்காமலே
கடந்து
செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது…!
உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான் காதல்.
பயணிப்போம்
ஒரு பயணம்
கரம்பற்றி
களைப்பாகும்
வரை
காதல் தேசத்தில்…!
நம்மை முழுவதும்
புரிந்துக் கொண்ட ஒருவர்
நம் வாழ்வில் இருப்பது
நமக்கு கிடைத்த மிக பெரிய வரம்
உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து
காதலியே மனைவியாக
வந்து விட்டால் அவன் அதிர்ஷ்டம்
பெற்றவன் ஆனால் மனைவி
அவன் காதலாக மாறினால்
அவன் வாழ்வில் இன்பம் பெற்றவன்.
நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்
உயிராக இருப்பவர்களிடம்
உரிமையாக இருப்பதை
காட்டிலும் உண்மையாக
இருப்பது தான் முக்கியம்
மனதில் காரிருள்
சூழ்ந்தபோது
உன் அன்பெனும்
ஜோதியில்
வாழ்வை
ஒளிமயமாக்கினாய்
இதயத்தின் ஓசையை கேட்டு பார்
துடிக்கும் அது உன்
பெயர் சொல்லி எப்போதும்
உன்னளவுக்கு
அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்
கிடைக்காத ஒருவருடைய
அன்பை எதிர்பார்த்து கிடைத்த
ஒருவருடைய அன்பை இழந்து விடாதீர்கள்.
உனக்காக என் மனதில் இடம் இல்லை
ஆனால் உன் காதலுக்கு உண்டு அன்பே.
உன் கண்ணை பார்த்தவுடன்
நான் உன் கண்ணில் உள்ள என்
உருவத்தை பார்க்க வில்லை
உன் காதலை பார்த்தேன்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
கடலின் அலை எப்படி ஓய்வதில்லையோ
அது போல் தான் நம் காதலும் ஒரு நாளும் ஓயாது.
நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
நம்முடைய கஷ்டத்தில்
ஆறுதலாக என்ன வார்த்தை
பேசினார்கள் என்பது நமக்கு முக்கியம் அல்ல.
யார் பேசினார்கள் என்பது தான் முக்கியம்.
அன்பே நீ என் அருகில்
இருந்தாலும் இல்லை என்றாலும்
உன் காதல் அன்பு மட்டும்
என்னை பிரியாதே.
மழைத்துளி எப்படி மண்ணின்
மீது விழும் பொழுது அழகானது
அதுபோல் நான் உன் காதலில்
ழும் பொழுது அழகானேன்.
என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
கனவு என்பது தூக்கத்தில் இருந்து
கண் திறக்கும் வரை தான்
ஆனால் காதல் என்பது வாழ்வின் கண் மூடும் வரை.
மௌன
கவிதை நீ
ரசிக்கும்
ரசிகை நான்
ஒரு பெண்ணை உண்மையாக நேசித்து பார்,
பல பெண்கள் உன் எதிரில் இருந்தாலும்
உன் கண் அந்த பெண்ணை மட்டும் தான் தேடும்.
சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்
வாழ்க்கையில் இன்பமோ
துன்பமோ எப்போதும்
நான் உன் கூடவே இருப்பேன்
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…
காதல் என்பது ஒரு மனித உயிர்
போல பலரிடம் காதல் வந்தாலும்
ஒருவரிடம் மட்டுமே வnழ ஆசைப்படுகிறது.
அவள் என்னை வெறுத்த பின்னும்
நான் அவளை நேசிக்கிறேன்.
ஏனென்றால், அவளின் தாயை விட அவளை
அதிக நாள் என் மனதில் சுமந்தவன் நான்.
என்னை
துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
காலம் சென்றாலும்,
கனவுகள் மறைந்தாலும்,
கவிதைகள் அழிந்தாலும்,
என் உயிர் பிரிந்தாலும்,
காற்றோடு தொடர்ந்து வருவேன்,
உன் காதல் என்னும் அன்புக்காக.
ஏதேதோயெழுத
நினைத்து
உன் பெயரை
எழுதிமுடித்தேன்
கவிதையாக
நீ
நலமா
எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது
மனம்…
வருவேன்
என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்…
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்
உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்
நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
சாலையோர
நடைப்பயிற்சியில்
காலைநேர
தென்றலாய் நீ…
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்…
மலருக்கு ஆசை
மண்ணில் விழாமல் இருக்க…
சூரியனுக்கு ஆசை
மறையாமல் இருக்க…
நிலவுக்கு ஆசை
தேயாமல் இருக்க…
எனக்கு ஆசை
நீ என்னை
மறவாமல் இருக்க…
நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்
சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்…!
உன்
அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க
தனிமையும்
பிடித்துப்போனது
என்னுடன்
உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்
தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனமேனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சாய்
ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன்
அருகாமையைபோலாகுமா
நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய
வார்த்தைகளோடு
மனதுக்குள்
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே
தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக
பூட்டி விட்டேன்
இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்
எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை
மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்
ஒரு விழி
நீ மறு விழி
நான் இரு விழிகள்
கொண்டு
அமைப்போமொரு
காதல் உலகை
நாம் வசிக்க
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
என்றோ
நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில்
எல்லாம்
காதல் நிரம்பி
வழியுதே
இன்று
என் கண்களுன்னை
காணும் போது
உன் கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
களைத்து போனது
என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து
எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே
உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]