How to Apply Magalir Urimai Thogai scheme apply online? கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தமிழ்நாடு அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு வரும் செப்டம்பர் மாதம் 15 முதல் அமல்படுத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது அந்தத் திட்டத்தில் எப்படி பயன் பெறுவது? விண்ணப்பிப்பது எப்படி? தகுதியானவர்கள் யார் யார் மற்றும் திட்டத்தின் படிவம் ஆகியவை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்த பட்சம் 21 வயது நிரம்பிய பெண்ணாக இருக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 15 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
- இந்த திட்டம் பெறுவதற்கு கண்டிப்பாக ரேஷன் அட்டை பெற்று இருக்க வேண்டும். அதுவே முதன்மை அடையாள அட்டையாக கருதப்படும்.
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- ஒரு ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவர்.
- ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண், குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
- ரேஷன் கார்டில் ஆண் குடும்பத் தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த குடும்பத் தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.
- திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கைகள் குடும்ப தலைவராக கருதப்படுவர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெற தகுதியானவர்கள் யார்?
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியான அளவுகோலை தமிழ்நாடு அரசு நிர்ணயத்துள்ளது.
- ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- 5 ஏக்கருக்கு குறைவான நஞ்சை நிலம் மற்றும் 10 ஏக்கருக்கு குறைவான புஞ்சை நலம் இருக்க வேண்டும்.
- 3600 யூனிட்டுக்கு குறைவான மின்சாரம் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
- வருமானச் சான்றிதழ் மற்றும் நில ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டியவை
- ஆதார் அட்டை எண்
- குடும்ப அட்டை எண்
- குடும்பத் தலைவியின் பெயர்
- குடும்ப தலைவரின் பெயர்
- குடும்ப உறுப்பினர்களின் பெயர்
- சொந்த வீடு இருக்கிறதா
- சொந்த பயன்பாட்டுக்கு கார்/ஜீப்/டிராக்டர் உள்ளதா?
- வங்கி கணக்கு விபரம்
- மின் கட்டண ரசீது
- வருமானச் சான்றிதழ்
- நிலம் சம்பந்தமான சான்றிதழ்கள்
இதற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடைகளின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி குடும்ப தலைவிகள் பயன்பெறுவார்கள் என்றும். 1.5 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பயன்பெற முடியாது.
மேலும் இந்தத் திட்டத்தின் விண்ணப்பம் இணைக்கப்பட்டுள்ளது.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
kalaingar magalir urimai thogai thittam, mk stalin, tn family women heads cash, tamil nadu ration, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மு.க.ஸ்டாலின், ரேஷன் கடைகள், magalir urimai thogai form pdf download, magalir urimai thogai form download, magalir urimai thogai application download pdf, magalir urimai thogai thittam, magalir urimai thogai thittam application form pdf, magalir urimai thogai thittam apply online form, magalir urimai thogai application form download, magalir urimai thogai vinnappam