Post office scheme In Tamil: சேமிப்பு என்பது நமது வாழ்க்கையில் ஒரு முக்கியமான பங்களிப்பு வகிக்கிறது. அது நமது எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு அரிய பொக்கிஷம். அதை நமது அவசர கால தேவைகளுக்கும், வயதான காலத்திலும் தேவைப்படும் இன்றியமையாத பணம். சேமிப்பு நம் வீட்டில் உள்ள உண்டியலில் போட்டு வைப்பது மட்டுமல்ல. அந்தப் பணம் பல மடமாக ஆக வேண்டும். அப்படி என்றால் எதில் முதலீடு செய்வது? எதன் மூலம் அதிக வருமானத்தை பெற முடியும் போன்ற பல சந்தேகங்கள் அனைவரின் மத்தியிலும் உண்டு.
இந்த பதிவில் மத்திய அரசின் அஞ்சல் துறை வைப்பு திட்டம் மற்றும் PPF திட்டம் பற்றி தான் காணப் போகிறோம். இந்த திட்டங்கள் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த திட்டத்தை நீங்கள் எந்த ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் தொடங்க முடியும். மேலும் இந்த திட்டத்தின் முழுமையான விபரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
PPF Account என்றால் என்ன?
PPF (public provident fund) பொது வருங்கால வைப்பு நிதி என்று அழைக்கப்படும்.த்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் ஒரு அருமையான சேமிப்பு கணக்கு திட்டம் ஆகும். இதில் நீங்கள் நீண்ட காலம் முதலீடு செய்ய முடியும். இதில் பல சலுகைகள் உண்டு. தற்போது உள்ள ரிப்போ வட்டி விகிதத்தின் படி 7.1% வட்டி கிடைக்கிறது.
தகுதி : Eligibility to open PPF
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
ஒரு நபர் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்.
NRI இந்தியர்கள் இந்த PPF கணக்கை திறக்க முடியாது.
How to Open PPF Account? இந்தத் திட்டத்தில் இணைவது எப்படி?
இந்தியாவில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பிரபல தனியார் வங்கிகள் (ICICI Bank, AXIS Bank, HDFC Bank) ஆகியவற்றில் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும். அதற்கு தேவையான ஆவணங்கள்
மேலும் இதைப் பற்றிய தகவல் அறிய அருகில் உள்ள தபால் நிலையத்தையோ அல்லது வங்கியையோ தொடர்பு கொள்ளலாம்.
PPF சேமிப்பு கணக்கின் நன்மைகள்:
இது அரசு நிறுவனம் என்பதால் உங்களது முதலீட்டுக்கும்m வட்டிக்கும் கண்டிப்பாக பாதுகாப்பு உண்டு.
இதில் முதலீடு செய்யும் 1.5 லட்சம் வரை வரி விலக்கு உண்டு.
இது ஒரு நீண்ட காலம் முதலீடு திட்டம் ஆகும்.
நீங்கள் குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்ய வேண்டும்.
கணக்கை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் கணக்கை முடிக்க விரும்பினால் முடித்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 500 ரூபாய் முதல் 1.5 லட்சம் வரை சேமிக்க முடியும்.
அஞ்சலக FD-Fixed Deposit சேமிப்பு திட்டம்
தபால் அலுவலகத்தில் FD திட்டத்தைப் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. இது பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்படும் Fixed Deposit திட்டத்தை போன்றதே ஆகும். இதில் நாம் குறிப்பிட்ட ஆண்டு வரை முதலீடு செய்ய முடியும். அதில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். தற்போது தபால் அலுவலகத்தில் சேமிக்கப்படும் FD வட்டி விகிதம் 6.9% மாக உள்ளது. 2 வருடம் முதல் 3 வருடங்கள் வரை பணத்தை முதலீடு செய்தால் 7% சதவீதமும், 5 வருடங்களுக்கு மேல் முதலீடு செய்தால் 7.5% சதவீத லாபமும் கிடைக்கிறது.
உங்கள் பணத்தை எதில் முதலீடு செய்வது நல்லது?
நீங்கள் FD அல்லது PPF இரண்டிலும் முதலீடு செய்யலாம். நீங்கள் முதலீடு செய்வது மற்றும் உங்கள் கணக்கை தொடங்குவது தபால் நிலையமாக இருந்தால் சிறப்பு. நீங்கள் உங்கள் முதலீட்டை தபால் அலுவலகத்தில் செய்வதால் உங்கள் பணத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனென்றால் இது அரசே நடத்தும் ஒரு நிறுவனம் என்பதால் உங்களது முதலீடு பற்றிய பயம் இல்லை.
மேலும் இந்த திட்டம் குறித்த முழுமையான விபரங்களுக்கு கிளிக் செய்யவும்.
மேலும் இந்த பதிவு குறித்து உங்களது கருத்தை கமெண்ட் செய்யவும். நன்றி வணக்கம்.