ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அம்பானி எப்போதுமே ஏழைகளை குறிவைத்து வியாபாரம் செய்வதில் முதன்மையானவர். அந்த வகையில் ரிலையன்ஸ் Jio நிறுவனம் இந்தியாவில் மலிவான 4G போன் Jio Bharat V2 -ஐ அறிமுகப்படுத்தி மற்ற நிறுவனங்களை பீதி அடைய செய்துள்ளது.
Jio Bharat V2 விலை ரூ.999 மட்டுமே என்பதுதான் இதில் கூடுதல் அதிர்ச்சி.
போனில் என்ன ஸ்பெஷல் என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Jio Bharat 4G விலை மற்றும் சிறப்பு அம்சம்
2025 -க்குள் 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெறுவதே நோக்கம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த 4g போனின் விலை ₹999 மட்டுமே🤑.
மேலும் ₹123 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்குச் செல்லுபடி ஆகும். மேலும் அன்லிமிடெட் கால்களையும் பெற முடியும்.
14 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.
₹1234 ரீசார்ஜ் செய்தால் ஒரு ஆண்டு முழுவதும் செல்லுபடி ஆகும் திட்டத்தை பெற முடியும்.
Jio Bharat V2 வாடிக்கையாளர்களுக்கு JioCinema, JioSaavn ஆகியவை இலவசமாக கிடைக்கும். இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த மொபைல் போனை பயன்படுத்தி JioPay மூலம் UPI வழியாக பணப்பரிவர்தனைகள் செய்ய முடியும்😍.
இந்த மொபைல் 23 மொழிகளில் கிடைக்கிறது. இந்த 4g மொபைல் போனை ஜூலை 7 முதல் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகும், இதன் விற்பனை மையங்களை தாலுகா வாரியாக பிரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் குறித்த சந்தேகங்களுக்கு Comment செய்யவும்.