How to Apply Magalir Urimai Thogai scheme apply online? கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
தமிழ்நாடு அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு வரும் செப்டம்பர் மாதம் 15 முதல் அமல்படுத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது அந்தத் திட்டத்தில் எப்படி பயன் பெறுவது? விண்ணப்பிப்பது எப்படி? தகுதியானவர்கள் யார் யார் மற்றும் திட்டத்தின் படிவம் ஆகியவை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பிப்பது எப்படி?
இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்த பட்சம் 21 வயது நிரம்பிய பெண்ணாக இருக்க வேண்டும். அதாவது செப்டம்பர் 15 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இந்த திட்டம் பெறுவதற்கு கண்டிப்பாக ரேஷன் அட்டை பெற்று இருக்க வேண்டும். அதுவே முதன்மை அடையாள அட்டையாக கருதப்படும்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஒரு ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவர்.
ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண், குடும்பத் தலைவியாக கருதப்படுவார்.
ரேஷன் கார்டில் ஆண் குடும்பத் தலைவர் என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த குடும்பத் தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.
திருமணம் ஆகாத பெண்கள், திருநங்கைகள் குடும்ப தலைவராககருதப்படுவர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெற தகுதியானவர்கள் யார்?
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியான அளவுகோலை தமிழ்நாடு அரசு நிர்ணயத்துள்ளது.
ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
5 ஏக்கருக்கு குறைவான நஞ்சை நிலம் மற்றும் 10 ஏக்கருக்கு குறைவான புஞ்சை நலம் இருக்க வேண்டும்.
3600 யூனிட்டுக்கு குறைவான மின்சாரம் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
வருமானச் சான்றிதழ் மற்றும் நில ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.