மல்லிகைப் பூக்களை பெண்கள் சூடுவது அழகுக்காக மட்டும் அல்ல! அது பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. காதல் உணர்வைத் தூண்டுவதில் மல்லிகைப் பூக்கள் முக்கிய மலராகக் கருதப்படுகிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத பல நன்மைகள் மல்லிகைப் பூக்களில் உள்ளன.
மல்லிகைப் பூவின் மருத்துவப் பயன்கள்
- மல்லிகைப் பூ மொட்டுகளை மருந்தாகச் சாப்பிட்டு வர பால்வினை நோய்கள் குணமாகும்.
- அதே மல்லிகை மொட்டுகள் சிறுநீரகம் மற்றும் கண் கோளாறுகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
- மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பனைவெல்லம் சேர்த்து குடித்து வந்தால் கண்களில் சதை வளர்ச்சி குறைந்து படிப்படியாக பார்வை தெரிய ஆரம்பிக்கும்.
குழந்தை இல்லாத தம்பதிகள்
குழந்தை இல்லாத தம்பதிகள் மல்லிகைத் தோட்டத்திற்குச் சென்றால், அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, அதன் வாசனையால் குழந்தை பிறக்கும் வாய்ப்பும் உள்ளது என முன்னோர்கள் கூறுவார்கள். மல்லிகைத் தோட்டத்தில் ரதியும் மன்மதனும் வசிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் தம்பதியரின் நெருக்கம் அதிகரித்து குழந்தை பாக்கியம் பெருகும் என்பது ஐதீகம்.
தோட்டம் இல்லாதவர்கள் மல்லிகைப் பூவை தைலமாக மாற்றி, அந்த வாசனை திரவியத்தை படுக்கையில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- மல்லிகைப் பூவை நன்கு அரைத்து உடலில் வீக்கம், எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வந்தால் எளிதில் குணமாகும்.
- மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி பொடியாக்க வேண்டும். இந்த பொடியை தண்ணீரில் கலந்து டீ போல் காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும்.
சிறுநீரகப்பை சுருக்கம் மற்றும் சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும். இந்த மல்லிகைப் பொடி டீயை தினமும் குடித்து வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.
நமது குடலில் புழுக்கள் வாழ்ந்தால் அவை குடல் சுவர்களைத் தின்று புண்களை உண்டாக்கும். இது வயிற்றின் செரிமானத்தை குறைக்கிறது. இந்தப் புழுக்களைக் கொல்ல மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் குடல் புழுக்கள் நீங்கும்.
- மல்லிகைப் பூ முகப்பருவுக்கு சிறந்த மருந்தாகும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
நேரத்துக்குச் சாப்பிடாததாலும், சத்தான உணவுகளைச் சாப்பிடாததாலும் சிலரது நரம்புகள் வலுவிழந்து உடலில் பல பாதிப்புகளை உண்டாக்கும்.
- இவர்களுக்கு மல்லிகைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
- புத்துணர்ச்சி பெறுவார்கள்.
- மல்லிகைப் பூவை நன்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் குடித்து வந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும்.
- மல்லிகைப் பூக்களுடன் எண்ணெய் சேர்த்துக் குடிப்பதால், கர்ப்பப்பை வலுப்பெறுவதுடன், பிரசவ வலியைக் குறைத்து, சுகப் பிரசவத்திற்கு உதவும்.
- அதே போல் கருப்பையில் உள்ள புண்கள் மற்றும் கட்டிகளைப் போக்க மல்லிகை எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
- நாள்பட்ட தழும்புகள் மற்றும் அரிப்பு ஆகியவை மல்லிகை எண்ணெயால் குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி…
- மல்லிகைப் பூவை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- சளியால் ஏற்படும் மூச்சுத் திணறல், இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட மல்லிகைப் பூ உதவுகிறது.
- மல்லிகை மொட்டுகளை எடுத்து, புண்கள், கொப்புளங்கள், வீக்கம் போன்றவற்றின் மீது அரைத்து வர, உடனே குணமாகும்.
- வெளியில் உணவு வாங்குபவர்களுக்கு வயிற்றுப் பூச்சிகள் வரலாம். வயிற்றில் பூச்சி இருந்தால், உடல் மெலிந்து, தோலில் வெள்ளைத் திட்டுகள் காணப்படும். அப்படிப்பட்டவர்கள் நான்கு மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை அருந்த வேண்டும். இதை குடிப்பதால் வயிற்றில் உள்ள கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை இறந்துவிடும்.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
மன அழுத்தம்
மன அழுத்தம், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் பெண்கள் எதையும் செய்ய வேண்டாம். மல்லிகைப் பூவை வாங்கி அதை உங்கள் தலையில் சூடிக் கொண்டாலே போதும். மன அழுத்தமும் குறையும், உடல் வெப்பநிலையும் மாறும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத தாய்மார்களுக்கு மல்லிகையில் வலி நிவாரணம் கிடைக்கும். தாய்ப்பாலை வெளியேற்றவும் வலியைப் போக்கவும் மல்லிகைப் பூ ஒரு சிறந்த மருந்தாகும். மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் தடவினால் வலி குறைவதுடன் பால் சுரப்பது படிப்படியாக நின்று விடும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]