PMEGP Loan Scheme Tamil: நீங்கள் சொந்தமாக தொழில் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதற்கான முதலீடுக்கு இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் மத்திய அரசின் PMEGP – பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ₹ 50000 முதல் ₹ 25,00000 வரை ஆன்லைன் மூலம் கடனை உங்களால் பெற முடியும். இந்த பதிவில் யாருக்கெல்லாம் இந்த கடன் வழங்கப்படும், அவர்களுக்கான தகுதி என்ன, அதனை எவ்வாறு பெறுவது, போன்ற முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
PMEGP கடன் திட்டம் | PMEGP kadan thitam
இந்த பதிவின் கடைசியில் தேவையான அனைத்து இணையதள முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் எளிதில் PMEGP ( Prime Minister Employment Generation Programme ) மூலம் கடன் பெற உதவியாக இருக்கும்.
PMEGP கடன் ஆன்லைன் | PMEGP Loan Online in Tamil
PMEGP (பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்) கடன் இந்த கடன் பற்றிய முழுமையான தகவலை நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம். 35% வரை மானியமும் இந்தக் கடன் திட்டத்தின் மூலம் நீங்கள் பெற முடியும். அதை எப்படி என்பதையும் இறுதிவரை படியுங்கள்.
PMEGP கடன் திட்டம் | PMEGP Loan Scheme in Tamil
PMEGP (பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்) கடனைப் பெற, உங்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு பாஸ்புக், திட்ட அறிக்கை, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி போன்ற போன்ற தகவல்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் உதவியுடன் நீங்கள் (PMEGP) எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! அதற்கான முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன!
PMEGP கடன் பெற தகுதி
இந்த கடன் தொகையை பெற யாரெல்லாம் தகுதி என்கின்ற பட்டியலை விரிவாக அதன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.
PMEGPக்கு தேவையான ஆவணங்கள்
PMEGP (பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்) கடனைப் பெற, விண்ணப்பதாரர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
- விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை (Aadhar card)
- விண்ணப்பதாரரின் பான் அட்டை (Pan Card)
- விண்ணப்பதாரரின் வங்கி கணக்கு பாஸ்புக் (Bank Passbook)
- விண்ணப்பதாரரின் திட்ட அறிக்கை (Project report)
- செயலில் உள்ள Mobile Number
- E-mail முகவரி
- Passport அளவு புகைப்படம்
மேலே உள்ள அனைத்து ஆவணங்களையும் கொண்டு ஆன்லைனில் (PMEGP) விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
PMEGP (பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்) கடனுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்
- முதலில் PMEGP இணையதளத்திற்கு செல்ல வேண்டும். கிளிக் செய்ய
2. அதில் Application For New Unit என்பதை கிளிக் செய்ய வேண்டும்
3. கிளிக் செய்த பிறகு, விண்ணப்பப் படிவம் உங்கள் முன் திறக்கும், அது பின்வருமாறு இருக்கும்.
4. இந்த பதிவு படிவத்தில் கோரப்படும் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளிடவும்.
5. மேலும் தேவையான அனைத்து ஆவணங்களும் ஸ்கேன் செய்து Upload செய்ய வேண்டும்.
6. Application-ஐ சமர்ப்பிக்கப்பட்டவுடன் அந்தப் படிவத்தை டவுன்லோட் செய்துகிளிக் செய்து, அதை பிரிண்ட் அவுட் எடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
மேலே உள்ள அனைத்து Step-களையும் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எளிதாக Apply செய்யலாம்.
மேலும் இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்யவும். இந்த பதிவு மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். முடிந்தவரை பகிருங்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story