கையில் காசு வந்தால் உடனே செலவாகி விடுகிறது. அதற்கு முதலில் பணத்தை நாம் எப்படி சேமிப்பது அல்லது எப்படி உருவாக்குவது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
What is “Financial Freedom?’ னு மொதல்ல தெரிந்து கொண்டால் போதும். காசு மறந்தும் பறந்துபோகாது. நம்ம சம்பாதிக்கிற பணத்துக்கு நாமதான் முதலாளி. அதில் சேமிப்பு, செலவு எல்லாமே அடங்கும். ஒரு நடுத்தர வருமானம், அதுல அவசரதேவைக்கு கணிசமான தொகை சேமிப்பு, தேவையான செலவுன்னு சில வரைமுறைகள் இருக்கணும்.
இப்போ நீங்க எங்க இருக்கீங்க?
எந்த இடத்துல இருக்கோம்னு தெரியாம வாழ்க்கையை மேம்படுத்தறது கஷ்டம். எங்க இருக்கோம்னு தெரிஞ்சாலே அடுத்த நிலைக்கு சரியான கோணத்துல எப்படி போகலாம்னு ஐடியா கிடைக்கும். ஒரு மாசத்துல ஒரு குறிப்பிட்டத் தொகையை செலவு பண்ணாம, கடன் வாங்காம சேர்த்துட்டாலே போதும். அடுத்த மாசம் அந்த தொகையைக் கூட்டி சேர்த்து முடியும். அந்த ஒரு மாசத்துல இருக்க கன்ட்ரோல் தான் முதல் அடியை வைக்க உதவும்.
இந்த வடிவ பற்களை உடையவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் – Shape of your teeth
இப்போ ஒரு பேப்பர், பேனாவ எடுங்க. அதுல உங்க வருமானம், கொடுக்க வேண்டிய லோன்ஸ், வீட்டு செலவு, பில், கடன்னு எல்லாத்தையும் குறிப்பெடுங்க. இதுக்கு முன்னாடி வீண் செலவு எவ்வளவு பண்ணிருக்கீங்க அப்படின்னு இப்போ தெரியும். அதை சேமிப்புன்னு போட்டு எழுதி வைங்க.
உங்க குறிக்கோள் என்ன?
இப்ப உங்க முதல் அடியை வெச்சாச்சு. தினமும் வேலைக்கு போக உங்கள தூண்டுற ஒன்னு இருக்கும். அதுதான் குறிக்கோள். கடனே இல்லாம வாழணும், ஒரு வீடு வாங்கணும், கார் வாங்கணும், இல்ல ஒரு பிஸினெஸ் பண்ணனும். இந்த மாதிரி ஒரு குறிக்கோள் கண்டிப்பா இருக்கும்.
எவ்வளவு காலம் வாழ்வீர்கள்? – நெற்றிக் கோடுகள் சொல்லும் ரகசியம்!
ஒருநாள் பிடிச்சதை வாங்கணும், சாப்பிடணும், பிடிச்ச இடத்துக்கு போகணும்ன்ற, கனவு எல்லாருக்கும் இருக்கும். அதுக்கு முதல்ல செய்ற வேலைய ரசிச்சி செய்யணும். அப்போதான் தினமும் மனசு சந்தோஷமா இருக்கும். அனாவசியமான செலவு பண்ணத் தூண்டாது. சுதந்திரமாக வேலைசெய்ய தேவையில்லாத பிரச்சனைக்கு டாட்டா சொல்ல கத்துக்கணும். சுத்தி இருக்கற சூழ்நலைகளை நிமக்கு சாதகமா மாத்தி, குறிக்கோளுக்கு எப்படி பயன்படுத்தலாம்னு யோசிக்கணும்.
கூடுதல் வருமானம் இருக்கா?
சேமிக்க முடியாத அளவுக்கு வருமானம் பற்றாக்குறையா இருந்தா வேற என்னென்ன வழியில சம்பாதிக்கலாம்னு பாருங்க. தீவிரமான முயற்சியில ஈடுபடலாம். வருமானம் போதுமானதா இருந்தாலும் சேமிப்ப அதிகப்படுத்த வேற ஒரு சின்ன தொழில் கைவசம் இருக்கட்டும்.
ஆண்மையை அதிகப்படுத்தும் யோகாசனம் – உங்களுக்காக…!
உதாரணத்துக்கு, சமையல், கைவேலைன்னு ஆர்வம் இருந்தா அது சம்பந்தமா ஒரு Blog இல்ல Youtube தொடங்கலாம். சுலபமா சப்மாதிக்கிற உங்க நிண்பர்கள்கிட்ட ஆலோசனை கேட்கலாம்.
பணவீக்கம் தேவையா?
ஆடம்பரமா வாழ ஆசைப்பட்டு வருமானத்த செலவழிச்சு, கடனும்
வாங்கி அதை கட்டமுடியாமல் கஷ்டப்படுறத விட சிம்பிளா
வாழ்ந்துட்டு போகலாம்ன்ற எண்ணம் வரவேண்டும். திடீர்னு
நறைய பணம் வந்தா அதை எப்படி ஆக்கப்பூர்வமா பயன்படுத்தறதுனு தெரியாம பாக்குற பொருளை எல்லாம் வாங்கறது, தப்பான இடத்துல இன்வெஸ்ட் பண்ணி பணத்தை இழந்து ஏமாந்து போகறதுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
இது எல்லாம் செஞ்சு பாருங்க நண்பர்களே கண்டிப்பாக உங்களுடைய பணத்தை நீங்க சேமிச்சு நிம்மதியான ஒரு வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]