ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு வகை விரத முறைகள் உண்டு. இந்து சமயத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு விரத முறை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் எந்த நாட்களில் விரதம் இருந்தால் எந்த வகையான பலன் உண்டு என்பதை இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
நம் தமிழ் மரபைப் பொருத்தவரையில் சந்திரவம்ச விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது சந்திரனின் பிறை வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவின் முறைப்படுத்தி விரதம் இருப்பதாகும். பிறையின் கடைசி நாளான அமாவாசை அன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.
அதே போன்று அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து ஒவ்வொரு படியாக உணவின் அளவை கூட்டப்பட்டு பௌர்ணமியில் முழு உணவையும் உண்ணுவது முறை. பின்னர் படிப்படியாக உணவை குறைத்துக் கொண்டு அம்மாவாசை அன்று விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
கிழமைகளுக்கான பலன்கள்
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை அன்று விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெற முடியும். தீராத நோயிலிருந்தும் விடுபட முடியும்.
திங்கள் அன்று விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, அன்பும் அமைதியும் நிலவும். கருத்து வேறுபாடுள்ள தம்பதியர் இடையே சுமூகமான நிலை ஏற்படும்.
செவ்வாய்க்கிழமை
செவ்வாய் அன்று விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் உள்ள உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கலைந்து அமைதியான நிலை திரும்பும்.