Vitamin D to escape the grip of Corona!
கொரோனா வைரஸ் உலக மக்களின் உயிரை வேகமாகப் பறித்து வருகிறது. ஒருபுறம், இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் சிகிச்சையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.
மறுபுறம், கொரோனா எந்த வகையான மக்களை பாதிக்கிறது? இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக சிகிச்சை முறைகளை எவ்வாறு கண்டறிந்து அதற்கேற்ப மாற்றுவது என்பது குறித்தும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத முதியவர்களை கொரோனா வைரஸ் எளிதில் வேட்டையாடும் என்பது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்பு 120 கிலோவுக்கு மேல் எடையுடன் இருந்த 5 பேரில் ஒருவர் கொரோனாவால் இறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வைட்டமின் டி குறைபாடு
இந்நிலையில், இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் ராணி எலிசபெத் மருத்துவமனை அறக்கட்டளை இணைந்து 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என்ன? என்று ஒப்பிட்டு சமீபத்தில் ஆய்வு நடத்தினார்கள். இந்த முதற்கட்ட ஆய்வின் முடிவில், கொரோனா வைட்டமின்-டி குறைபாடு காரணமாக பெரும்பாலானோர் உயிர் இழந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
[pld_simple_list limit=”1″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
விரைவில் குணமடைவார்கள்
பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, “கொரோனா நோயாளிகள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் பெற்றால், அவர்கள் விரைவாக குணமடைய வாய்ப்புகள் அதிகம்.” ஏனெனில் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக அவர்கள் எளிதாக கொரோனாவால் தாக்கப்படுகிறார்கள். “இறந்தவர்களில் ஏராளமானோர் வைட்டமின் டி குறைபாடுடையவர்கள்.”
சரி, வைட்டமின்-டியின் எந்த ஆதாரங்கள் அதிகம்?
- சூரிய ஒளியில் இருந்து இயற்கையாகவே மனிதர்களுக்கு வைட்டமின்-டி அதிகம் கிடைக்கிறது.
- மீன்களில் டுனா, கலா, கானாங்குத்தி மற்றும் சங்கரா ஆகியவற்றில் வைட்டமின்-டி உள்ளது. குறிப்பாக காலாவில் அதிகம்.
- ஆரஞ்சு பழச்சாறு, தானியங்கள், சோயா பால், பாலாடைக்கட்டி, காளான்கள், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றிலும் வைட்டமின்-டி ஏராளமாக உள்ளது.
பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல், சோப்பு போட்டு கைகளை அவ்வப்போது கழுவுதல் போன்றவற்றுடன், கொரோனா தாக்குதலைத் தவிர்க்க வைட்டமின்-டி ஒரு நல்ல ஆயுதமாகத் தெரிகிறது!
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]