Eye care tips in tamil – 5 ways to protect your eyes கண்களை காக்க மிக எளிய வழிமுறைகள் ஆரோக்கியம், உடல்நலம், ஆரோக்கியமான கண்கள்
கண் பாதுகாப்பு குறிப்புகள்!
அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது…. எனத் தொடங்கும் பாடல் வரிகளுக்கு ஏற்ப மனித உடலில் மிகவும் அற்புதமானது, அதிசயமானது. அதிலும் கண் பார்வையானது விலை மதிப்பற்றது. காரணம் ஒரு 40 Mega pixel கேமராவின் விலை பல லட்சம். அதைவிட நமது கண் பார்வை 1000 மடங்கு Mega pixel அதிகம்😎. அதனால்தானே “கண்ணைப் போல பார்த்துக்கொள்” என்கிறோம்.
Eye care tips
கண்களின் பாதுகாப்பு என்பது தினந்தோறும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கிறது. முக்கியமாக ஆரஞ்சு, திராட்சை ஆகியவை மிகவும் சிறந்தது. இவை கண்களில் ஏற்படக்கூடிய திசுக்களின் சிதைவுகளை கூட தடுக்கலாம் என்கிறார்கள் மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
நாம் வெயிலில் நடக்கும் போதும் இரு சக்கர வாகனங்களை உபயோகிக்கும் போதும் கண்ணாடி (Goggles) அணிவதன் மூலம் 90 சதவீதம் சேதாரங்கள் தடுக்கப்படுகின்றது. எனவே இதை அவசியம் பயன்படுத்துங்கள்.
தினமும் குறைந்தது 40 நிமிடமாவது நடைப்பயிற்சி செய்யுங்கள். குறைந்தது வாரத்திற்கு நான்கு முறையாவது நடங்கள். நடைபயிற்சி செய்வதால் விழிகளுக்குள் ஏற்படும் அழுத்தம் குறைகிறது. முக்கியமாக சர்க்கரை வியாதி, குளுக்கோமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நடைப்பயிற்சி அவசியம் தேவை.
கண்களில் வெளிச்சம் படாத படி மூடிக்கொண்டு விழிகளை இடது வலது புறமாக திருப்புவது (நகர்த்துவது) ஒரு நல்ல பயிற்சி.
மல்லாந்து படுப்பதும் கண்களுக்கு மிகவும் நல்லது. ஒருக்களித்து படுப்பதால் தலையணை நல்ல மிருதுவாக இருக்கவேண்டும்
வீதிகளில் விற்கும் விலை மலிவான குளிர் கண்ணாடிகளை (Cooling galas) தவிர்க்கவும். (Ultra violet) அல்ட்ரா வயலட் கதிர்களை இந்த வகை கண்ணாடிகள் தடுக்காது. இதனால் கண்கள் பாதிக்கக்கூடும்
உடல் எடையை சரியான அளவு பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதுவும் டயாபட்டீஸ் உள்ளவர்கள் கண் பாதிப்பு ஏற்பட மிகவும் அதிக அளவு வாய்ப்பு உண்டு.
தொடர்ந்து கணிப்பொறி, மொபைல் போன்கள், தொலைக்காட்சி, போன்றவற்றை பார்ப்பவர்கள் சிறிது நேர இடைவெளியில் கண்களை நன்கு மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் அசைப்பதன் மூலம் கண்களில் ஏற்படும் டிரஸ் (Stress) குறைகிறது.
வாரம் இரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
கண்களை காக்க எளிய 5 வழிகள்
- TV பார்க்கும் போது இருட்டான அறையில் பார்க்காமல் திரைக்கு பின் ஏதேனும் ஒரு ஒலி இருக்கும்படி கவனித்துகொள்ளவும்.
- படிக்கும் பொழுது கண்களை மிகவும் அலட்டாமல், கண்கள் சோர்வடையும் வரை நீடித்து படிக்காமல் இருக்கவும்.
- கான்டேக்ட் லென்ஸ் Contact lens) அல்லது கண்ணாடிகளை தேவைக்கு ஏற்ப உபயோகிக்கவும்.
- கம்ப்யூட்டர் மானிட்டரை கண்பார்வைக் கோட்டிற்கு கீழ் அமையும்படி பார்த்துகொள்ளவும்
- கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும்போது சிறு சிறு இடைவேளைகள் எடுத்துகொள்வது அவசியம்
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ pagination=”false”]
[pld_simple_list limit=”9″ category=”261, 5, 6, 7, 366, 8, 258, 9, 10, 11, 12, 15, 13, 14″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]