முள்ளங்கியின் மருத்துவ குணம், Mullangi benefits in Tamil, radish benefits in tamil, முள்ளங்கி பயன்கள், தீமைகள், ஜூஸ், நன்மைகள், கீரை, சட்னி
Radish benefits in Tamil
நாம் உண்ணும் உணவே மருந்து என நமது முன்னோர்கள் கூறியதில் எதுவும் தவறில்லை. காரணம் இன்றைய கால சூழ்நிலையில் நல்ல காய்கறிகளில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நமது ஆயுளை கூட்டுகிறது. அந்த வகையில் நீர் காய் என அழைக்கப்படும் முள்ளங்கியின் நன்மைகள் பற்றிய பார்க்கப்போகிறோம்.
முள்ளங்கியின் மருத்துவ குணம் – Mullangi benefits in Tamil
முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை.
முள்ளங்கி பசியைத் தூண்டும் இயல்பு உடையது. இதை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான ரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
இந்த இரு குணங்களுக்காகவே உலகம் முழுவதும் முள்ளங்கிக் கிழங்கை விரும்பி சாப்பிடுகிறார்கள். சுத்தமான ரத்தத்தால் ( immunity ) நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. இதனால் உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது.
மலச்சிக்கல், இரைப்பைக் கோளாறுகள், நெஞ்சுவலி, சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள்காமாலை, முகம்கறுப்பாக மாறுதல் போன்றவைகளையும் முள்ளங்கிக் கிழங்கும், அதன் இலைகளும் நன்கு குணப்படுத்தி விடுகின்றன.
10 கிராம் முள்ளங்கிக் கிழங்கில் ஈரப்பதம் 94 சவீதமும், மாவுச்சத்து 3 சதவீதமும்,மீதியில் சிறிதளவு புரதம்,தாது உப்புகள், கொழுப்பு, நார்ச்சத்துகள் உள்ளன.
1 கப் முள்ளங்கி சாறைப் பருகினால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் உள்பட அனைத்து சிறு நீர்க்கோளாறுகளும் குணமாகும்.
மஞ்சட்காமாலை உடனே கட்டுப்பட முள்ளங்கி சாற்றை மெல்லிய துணியில் வடிகட்டி அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அருந்தவேண்டும்.
இருமல், நெஞ்சு சம்பந்தமான நோய்கள், வயிற்று உப்புசம் தொண்டைப்புண், தொண்டைக்கட்டு முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி முள்ளங்கி சாறுடன் அதே அளவு தேனையும் சேர்த்து தினசரி மூன்று வேளை சாப்பிட்டால் மேற்கண்ட கோளாறுகள் சரியாகும்.
தோளில் வெண்புள்ளி உள்ளவர்கள் 30 முதல் 5௦ கிராம் வரை முள்ளங்கி விதையை இடித்து வினிகர் மூலம் பச்சையாக்கி வெண்புள்ளி உள்ள இடங்களில் தடவ வேண்டும். தினசரி தடவினால் கரும் புள்ளிகள் மறையும். தோலின் நிறத்தை மாற்றி பழைய நிலைக்கு கொண்டு வந்து விடும்.
குழந்தைகளை மந்தப்புத்தி இல்லாமல் சுறுசுறுப்பாக படிக்கவும், நன்கு உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கி விதையையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முள்ளங்கிக் கீரையில் பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்தும் அதிக அளவில் உள்ளன.
100 கிராம் வெள்ளை முள்ளங்கி கீழ்க்கண்ட ஊட்டச்சத்தை அளிக்கின்றன