Ayurvedic treatment for digestion in tamil
ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதற்கு சில அடிப்படை வழிகாட்டுதல்கள் உள்ளன. இது எப்போதும் நம் வீட்டில் பெரியவர்கள் கூறும் அறிவுரை. அதாவது சாப்பிட்ட பின் தூங்கவோ, குளிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ கூடாது. அதேபோல், சாப்பிட்ட பிறகு, அதிக தண்ணீர் குடிக்கக் கூடாது.
இப்போதைய காலத்தில் உட்கார்ந்து பொறுமையாக சாப்பிடக் கூட நேரமில்லை என்பதும் உண்மைதான். அதனால் ஏதோ வாயில் சாப்பாட்டை வைத்துக் கொண்டு ஓடுகிறோம். சிலர் ஆரோக்கியமான உணவைப் பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால் நேரமின்மையால் அவர்களால் சரியான வழிமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை. அவர்களுக்கு ஆயுர்வேதம் சிறந்த வழி. ஆயுர்வேதமும் என்ன மாதிரியான உணவுப் பழக்கவழக்கங்கள் இருக்கக் கூடாது என்று சொல்கிறது. அவை என்னென்ன பழக்கங்கள் என்று பார்ப்போம்.
குளிர்ந்த நீர் (பிரிட்ஜ் வாட்டர்)
நீங்கள் கோடைக்காலத்தில் வெளியே சென்று வரும்போது, உங்கள் தாகத்தைத் தணிக்க குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தண்ணீரைக் குடிப்பீர்கள். அந்த வெப்பநிலையில் கூட வசதியாக இருக்கும். ஆம், நம்மில் பலர் இதை செய்கிறோம். இது மிகவும் தவறு என்று நமக்குத் தெரியுமா…?
சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பது உங்கள் செயல்திறனை பாதிக்கும். இதனால் செரிமானம் பாதிக்கப்படும். ஆயுர்வேதத்தைப் பொறுத்த வரையில், உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் மட்டுமே எடுக்க வேண்டும். அதே சமயம் பிரிட்ஜ் வாட்டராகவும் இருக்கக்கூடாது. உணவுக்குப் பிறகு சாதாரண அறை வெப்பநிலை தண்ணீரைக் குடிக்கவும்.
தவறான உணவுகளைச் சேர்ப்பது
சில உணவுகளை சில உணவு வகைகளுடன் சேர்த்து உண்ணக்கூடாது. அப்படி சாப்பிடுவதால் பிரச்சனைகள் ஏற்படும். அதனுடன் உங்களுக்கு வயிறு தொடர்பான சில கோளாறுகளும் இருக்கும். சில வகையான உணவுகளை ஒன்றாகச் சாப்பிடும்போது கவனமாக இருங்கள். இல்லையெனில் நீங்கள் அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. உதாரணமாக, வாழைப்பழத்தை நெய்யில் சேர்க்கக் கூடாது என்றும், பாலில் முலாம் பழம் சேர்க்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது.
கொழுப்பு
நம்மில் பலர் கொழுப்பு நிறைந்த உணவுகளை விரும்புவதில்லை. கொழுப்பை சேர்த்து கொள்வதற்குக் காரணம், கொழுப்பு உடலைக் பருமனாகமாற்றிவிடும் என்ற பயம்தான். ஆனால், நம் அன்றாட உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகளை சரியான அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சரியான அளவு கொழுப்பு ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. உண்மையில் ஆயுர்வேதத்தின் படி நமது உடல் சரியாக செயல்பட சில ஆரோக்கியமான கொழுப்புகள் தேவை என்று அறியப்படுகிறது.
நின்று கொண்டே சாப்பிடுவது
இன்றைய குழப்பமான உலகில் யாரும் அமர்ந்து சாப்பிடுவதில்லை. நின்றுகொண்டே அவசர அவசரமாக உணவை முடித்துவிடுவார்கள். நின்று கொண்டு சாப்பிடுவதால் அதிகமாக சாப்பிட வாய்ப்பு உள்ளது. மேலும், இது உங்கள் வயிற்றில் வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின் படி, நீங்கள் சாப்பிடும் தோரணை செரிமான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோல, தண்ணீர் குடிக்கும் போது, நின்று கொண்டு குடிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது.
வேகமாக சாப்பிடுவது
உணவை நன்றாக மெல்லாமல் மிக விரைவாக விழுங்குவது உங்கள் செரிமானத்தை பாதிக்கும். அதனால் தான் மென்று சாப்பிட்டால் நூறு வயது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மிக வேகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இது மட்டுமின்றி, வேகமாக சாப்பிடுவதும் உங்கள் இன்சுலின் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். உணவை முறையாக மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
குறைவான உணவு
நம் உடலுக்குத் தேவையான உணவை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய நவீன உலகில், குறைவாக சாப்பிடுவதையே பலர் பெருமையாகக் கருதுகின்றனர்.
மிக முக்கியமாக, பெண்கள் குறைவான உணவை உட்கொள்கிறார்கள். அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால் குறைந்த அளவு உணவையே சாப்பிடுவார்கள். ஆனால், சரியான அளவு உணவை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், உடல் எடை கூடுகிறது என்பதை நம்மில் பலர் உணர்வதில்லை. எனவே பெண்களே, இதுவரை இதுபோன்ற தவறுகளை நீங்கள் செய்திருந்தால், அதைத் திருத்தி சரியான உணவைப் பின்பற்றி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழுங்கள்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story