Hair Growth Tips in Tamil | Garlic helps the hair grow faster | Garlic Uses in Tamil
தினமும், தலை சீவும்போது கொத்து கொத்தாக முடி உதிர்வதால் அதிக மன வேதனை அடைகிறீர்களா? இனி கவலை வேண்டாம். இங்கே, உங்கள் வீட்டு சமயலறையில் உள்ள பூண்டினை கொண்டு எவ்வாறு முடி உதிர்வதைத் கட்டுப்படுத்துவது என்பதை பற்றி பதிவிடப்பட்டுள்ளது.
இரண்டு பல் பூண்டை எடுத்து அதை சிறு துண்டுகளாக வெட்டி நசுக்கி கொள்ளவும். பின்னர், தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடாக்கி, அதில் நசுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பின்னர், ஆறவிட்டு இந்த கலவையை உங்கள் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே தலையில் அதை ஊறவிடவும். பின்னர், நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பூ-வை கொண்டு தலையை அலசவும்.
பூண்டு, முடியின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?
பூண்டில், ஜின்க், சல்பர் மற்றும் கால்சியம் போன்ற முடிகளுக்கு தேவையான சில முக்கிய மூலப்பொருட்கள் இருப்பதால், முடி உதிர்வதை கட்டுப்படுத்த உதவுகிறது.
பூண்டு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், முடி உதிர காரணமகா இருக்கும் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகின்றது.
பூண்டில் உள்ள செலெனியம், இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, மற்றும் முடியின் வேர்க்கால்களை சுத்தம் செய்து முடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
மேலும், இவை தலையில் உள்ள பொடுகைப் போக்கவும் சிறந்த தீர்வைத் தருகிறது.