நன்றாக தலைக்கு குளித்தாலும் பிசுபிசுப்பாகவே முடி இருக்குதா? Greasy hair treatment
Greasy hair treatment in tamil, Dandruff home remedies for greasy hair or oily scalp hair grow tips in tamil, Hair Growth care Tips
ஒருவேளை இதற்கு காரணம் இதுவாக இருக்கலாம்.!!!
இன்றைய சூழ்நிலையில் முடி பராமரிப்பு (Hair Fall) என்பது மிகவும் கடினமாக மாறிக்கொண்டு வருகிறது. அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் நம்மை பாதிக்கிறது. இது நாம் உண்ணும் உணவு பொருட்கள் முதல் அன்றாடம் நாம் செய்யும் செயல்கள் வரை அடங்கும். இவை நமது உள்ளுறுப்புகளை மட்டுமல்லாமல் நமது வெளி உறுப்புகளையும் பாதிக்க தான் செய்கிறது. அதில் முதல் பாதிப்பாக நமக்கு தெரிய வருவது முடி சம்பந்தமான பிரச்சனைகள்.
பொடுகுத்தொல்லை, முடி கொட்டுதல், வழுக்கை, எண்ணைப்பசை, இளம் நரை, இப்படி பலவிதமான பிரச்சினைகள் முடியின் மூலம் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கும் நமது உணவுப் பழக்கத்துக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக தலையை எவ்வளவுதான் அலசினாலும் மீண்டும் மீண்டும் என்னை பிசு காகவே வருவது போன்று இருப்பதற்கு காரணம் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் தான் என்கிறது அந்த ஆய்வு. அவை எந்த எந்த உணவுகள் என்பதைப் பற்றித்தான் நாம் இந்தப் பதிவில் காணப்போகிறோம்.
சர்க்கரை
நாம் தினமும் உண்ணும் உணவில் அதிகமாக சர்க்கரையை சேர்க்கும் பொழுது இந்த பிரச்சனை கண்டிப்பாக வரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சர்க்கரை அதிகமாக சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிகமாக இருக்கும். இந்த ஆர்மோன் செய்யும் மாற்றங்கள் நம் தலையில் அதிகமாக எண்ணெய் சுரப்பிகள் தலையில் மேலும் மேலும் எண்ணையை சுரக்கச் செய்துவிடும்.
கொழுப்பு சம்பந்தப்பட்ட உணவுகள்
அதிக அளவு கொழுப்பு சேர்த்துக் கொண்டால் அவை உடலை பாதித்துவிடும். அதுமட்டுமல்லாமல் நமது சருமம் மற்றும் முடியின் நலத்தையும் சேர்த்து பாழாக்கிவிடும். கோழி இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் பல பாதிப்புகள் இதில் அடங்கும். இதனால் எண்ணெய் சுரப்பிகள் தலைப்பகுதியில் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும்.
கார்போஹைட்ரேட்
கார்ப்ஸ் என்று நம்மால் அழைக்கப்படும் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் முடியில் மீண்டும் மீண்டும் எண்ணை பிசுக்கு வரத்தொடங்கும். குறிப்பாக பிரட், பிஸ்கட், குக்கீஸ், போன்றவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்படும்.
வெள்ளை உப்பு
உப்பை முடிந்த அளவுக்கு அளவாக பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்தும் பொழுது நமது உடம்பில் பல மாற்றங்களை நாம் தவிர்க்க முடியும். உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக் கொண்டால் அது எண்ணெய் பிசுக்கு வித்திடுவது போல ஆகும். முடிந்தவரை உப்பை குறைவாக பயன்படுத்திக் கொண்டால் நாம் சர்க்கரை நோயிலிருந்து கூட தப்பித்துக் கொள்ளலாம். அதிக உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ், கடலை, பட்டாணி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்தாள் இந்த எண்ணெய் சுரப்பதை தவிர்க்க முடியும்.
பால் பொருட்கள்
நாம் உண்ணும் உணவில் அதிகமாக பால் பொருட்களை சேர்த்துக் கொள்வதாலும் முடியில் எண்ணெய் பிசுக்கு உண்டாகக்கூடும். மேலும் இதனால் முகப்பருக்கள் முகத்தில் எண்ணெய் வடிதல் ஆகிய பிரச்சினைகளும் உருவாகக்கூடும். இந்தப் பால் பொருட்களால் நம் உடலில் பல ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். முடிந்தவரை பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
பொரித்த மற்றும் வறுத்த உணவு வகைகள்
இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லோரும் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் இருக்கிறோம். இதுபோன்ற வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உண்பதன் மூலம் நமது உடலில் எண்ணை பிசுபிசுப்பு தன்மை அதிகமாகிறது. இதன் காரணமாக தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு முகத்தில் எண்ணெய் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன முடிந்தவரை இவ்வகையான உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
இதற்கான தீர்வு
எண்ணை பிசுபிசுப்பு நீங்க விட்டமின் பி, ஜிங்க் மற்றும் விட்டமின் டி கொண்ட உணவுகளை அதிகமாக சேர்த்து சாப்பிட்டாலே போதும். மேலும், கெட்ட கொழுப்புகள் கொண்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலமாக இந்தப் பிரச்சனையில் இருந்து நம்மால் வெளிவர முடியும்.
விட்டமின் டி (hair fall vitamins) கொண்ட உணவுகளை நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
பயனுள்ள தகவல்களை மட்டும் பகிரும் இந்த whatsapp குரூப்பில் இணைக்க
இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கத்தை காண கிளிக் செய்யவும்
அனைத்து ஆன்மீக பதிவுகளையும் காண கிளிக் செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story